எக்ஸ் காதலியை பழிவாங்க நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. விபரீத எண்ணத்தால் கடத்தல், கற்பழிப்பு..!
எக்ஸ் காதலியை பழிவாங்க நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. விபரீத எண்ணத்தால் கடத்தல், கற்பழிப்பு..!

கருத்து வேறுபாடு காரணமாக காதலி தன்னை கைவிட்டுச் சென்ற காதலியை பழிவாங்க, இளைஞர் முடிவை எடுத்தது பதறவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டி பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண், அவரின் முன்னாள் காதலரால் கடத்தப்பட்டு, 5 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்ட பயனராம் நடந்துள்ளது. மொத்தமாக இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "சித்தப்பா சொல்றத கேளுடி" மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்.!
4 பேர் பெண்ணை வன்கொடுமை செய்ததாகவும், 2 பேர் அவர்களுக்கு உதவி செய்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் முக்கிய குற்றவாளி, பெண்ணுடன் ஒரே கிராமத்தில் வசித்து வரும் நபர் என்பதும், இவர் பெண்ணின் முன்னாள் காதலர் என்பதும் தெரியவந்துள்ளது.
பழிவாங்க எண்ணி அதிர்ச்சி செயல்
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதல் வயப்பட்டு பேசி வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பெண் காதல் உறவை முறித்துக்கொண்டார். மேலும், வேறொரு இளைஞரிடம் அவர் பேசி வந்துள்ளார். இதனால் காதலியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞருக்கு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று காதலியின் தம்பியை கடத்திய நபர், நான் சொல்லும் இடத்திற்கு வரவில்லை என்றால், உனது தம்பியை கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். நள்ளிரவு சுமார் 1.15 மணியளவில், வெள்ளிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. தனியாக வந்த பெண்ணை 6 பேர் கும்பலும் ஒருவன் பின் ஒருவராக, பள்ளி ஒன்றுக்கு பின்புறம் உள்ள புதர் பகுதியில் பலாத்காரம் செய்து இருக்கிறது.
விசாரணையை தொடர்ந்து பெண் அளித்த புகாரின் பேரில் அவரின் முன்னாள் காதலர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் 20 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: எச்சில் உமிழ்ந்த நீரை கொடுத்து ராகிங் கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.!