"சித்தப்பா சொல்றத கேளுடி" மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்.!
சித்தப்பா சொல்றத கேளுடி மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்.!

மகளிடம் அத்துமீறிய கள்ளக்காதலன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில், ஒரு 15 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில், அந்த சிறுமி தனியாக தனது அறையில் இருந்துள்ளார். அப்போது தாயின் அனுமதியுடன் அவருடைய 30 வயது கள்ள காதலன் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார்.
கொலைமிரட்டல்
சிறுமி எவ்வளவோ தடுக்க முயன்றும், கெஞ்சியும் அந்த காமக்கொடூரன் சிறுமியை விடவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறுமியின் தாயே அவரை அடித்து துன்புறுத்தி இது பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 4 வயது சிறுமி மரணம்; பெற்றோர் கண்ணீர்.!
தந்தை புகார்
இதற்குப் பின் சிறுமியும் பயந்து போய் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில், சிறுமியின் தந்தைக்கு இது பற்றி தெரிய வந்துள்ளது. இதை அறிந்த அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
போக்ஸோவில் கைது
இந்த புகாரின் பேரில் சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மகளுக்கு அரணாக இருந்து காக்க வேண்டிய தாயே இப்படி சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் பெருமதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 77 வயது மூதாட்டியை நிர்வாணமாக்கி, சிறுநீர் குடிக்க வைத்து ஊர்வலம்; சூனியம் செய்ததாக தாக்கி கொடூரம்.!