சண்டையில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய நட்பு.. வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!
சண்டையில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய நட்பு.. வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே, காஸர்வடவிளி, பட்டழிபாடா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ஷ்ரவன் லீகா (வயது 27). இவரின் நண்பர் விகாஷ் மேனன் (வயது 32). நண்பர்களான இருவரும், சம்பவத்தன்று குடியிருப்பு வளங்கத்தில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வைத்து ஷ்ரவன் - விகாஷ் இடையே கருத்து முரண் ஏற்பட்டு, இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டனர். நண்பர்கள் சமாதானம் அடைவார்கள் என எண்ணியிருந்த நிலையில், திடீரென வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற விகாஷ், நண்பர் லீகாவின் ஒருபக்க காதை கடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: எக்ஸ் காதலியை பழிவாங்க நண்பர்களுடன் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. விபரீத எண்ணத்தால் கடத்தல், கற்பழிப்பு..!
மாமிசமா அது?
வலி பொறுக்க இயலாமல் ஷ்ரவன் லீகா கதறவே, அதனை கண்டுகொள்ளாத விகாஷ், தொடர்ந்து காதலி கடித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் லீகாவின் காது துண்டாகியது. அதனை மாமிசம் போல விகாஷ் மேனன் மென்று விழுங்கினார். இதனைக்கண்டு அதிர்ந்துபோனவர்கள், காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், வலியால் கதறிக்கொண்டு இருந்த ஷ்ரவன் லீகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்குவாதத்தில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.
இதையும் படிங்க: மும்பையில் இருந்து, லிப்ட் கேட்டே.. கும்பமேளாவுக்கு வந்த இளைஞர் சாதனை.!