கத்தி முனையில் 19 வயது இளம்பெண் இருவர் கும்பலால் வன்கொடுமை; உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தவரை மிரட்டி துணிகரம்.!
கத்தி முனையில் 19 வயது இளம்பெண் இருவர் கும்பலால் வன்கொடுமை; உறவினரிடம் பேசிக்கொண்டிருந்தவரை மிரட்டி துணிகரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, சிறுர் பகுதியில் வசித்து வரும் 19 வயதுடைய இளம்பெண், நேற்று இரவு நேரத்தில் உறவினருடன் பேசிக்கொண்டு இருந்தார். இரவு சுமார் 11 மணியளவில், வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உறவினருடன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இளம்பெண் மற்றும் அவரின் உறவினரை கத்தி முனையில் மிரட்டி இருக்கின்றனர். இருவரையும் தங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என கூறி, அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!
பாலியல் பலாத்காரம்
பின் விடியோவை காண்பித்து மிரட்டி, இனம்பெண்ணை இருவர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, பெண்ணின் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரிடம் விபரத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி அமோல் (வயது 25), கிஷோர் (வயது 29) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கீரைக்கட்டுகளை சாக்கடை நீரில் சுத்தம் செய்த வியாபாரி.. வயிற்றை பிரட்டும் பகீர் வீடியோ வைரல்.!