Watch: 3 வது மாடியில் 2 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; தெய்வமாக உயிரை காப்பாற்றிய நபர்.!
Watch: 3 வது மாடியில் 2 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; தெய்வமாக உயிரை காப்பாற்றிய நபர்.!

பால்கனியில் இருந்து சிறுவன் தவறி விழுந்த நிலையில், அவரின் உயிர் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, டோம்பிவிலி பகுதியில் வசித்து வருபவர் பாவேஷ் மஹ்தரே. இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டின் தரைத்தளத்தில் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அதே குடியிருப்பின் வேறொரு வீட்டில், 3 வது மாடியில் வசித்து வரும் 2 வயது சிறுவன், பால்கனி பகுதியில் இருந்து விளையாடியபோது தவறி விழுந்தார்.
இதையும் படிங்க: Watch: செல்போனில் ஆர்வமாக பேச்சு; கைக்குழந்தையுடன் பாதாள சாக்கடையில் விழுந்த பெண்.!
கைகளில் விழுந்து உயிர்தப்பினார்
சிறுவன் மேலே இருந்து கீழே விழுவதை கவனித்த மஹ்தரே, உடனடியாக சுதாரித்து விரைந்து ஓடி சிறுவனை காப்பாற்றினார். எனினும் சிறுவன் கீழே விழுந்துவிட்டாலும், மஹ்தரேவின் கைகளில் விழுந்து கீழே விழுந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை
இதனால் சிறுவன் நேரடியாக தரையில் மோதுவது தவிர்க்கப்பட்டு, நொடியில் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமணியல் அனுமதிக்கப்பட்ட நிலையில், லேசான எலும்பு காயம் அடைந்த மஹ்தரேவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறுவனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மொத்தமாக 13 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பில், 3 வது தலத்தில் வசித்து வந்த சிறுவன் தவறி விழுந்திருக்கிறார். நல்வாய்ப்பாக அவரின் உயிர் கைப்பற்றப்பட்ட நிலையில், சிறுவனின் உயிரை காப்பாற்றியவருக்கு குடும்பத்தினர் உட்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளி அறையில் நடந்த பலான வேலை.. தலைமை ஆசிரியர் - பெண் ஆசிரியை நெருக்கம்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!