விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; சீருடையில் சாலை மறியல்.!
விஸ்வரூபம் எடுக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; சீருடையில் சாலை மறியல்.!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த பல சிறுமிகளுக்கு, ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தில் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காத நிலையில், பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பள்ளியை அடித்து நொறுக்கி, ஆசிரியர் மணிகண்டனை வெளுத்து எடுத்தனர்.
சாலை மறியல் போராட்டம்
இதனையடுத்து, வந்த காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் ஆளுங்கட்சி தரப்பு என கூறப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு சூழ்நிலை உண்டாகிய நிலையில், காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் மற்றும் போராட்டத்தை கைவிட வைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை., பள்ளி, மதுபானக்கடை சூறையாடல்.. புதுச்சேரியில் பதற்றம், சாலை மறியல்.!
பள்ளி சீருடையில் போராட்டம்
கைது செய்யப்பட்ட ஆசிரியர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதனிடையே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், காலை முதலாக பள்ளி சீருடையில் வந்த மாணவ-மாணவிகள் திடீரென தவளக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சனீஸ்வர பகவானுக்கே விபூதி அடித்த பூசாரி.. திருநள்ளாறு கோவில் பெயரில் அதிர்ச்சி செயல்..!