தூக்கில் துள்ளத்துடித்த உயிர்.. 5 நிமிடத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!
தூக்கில் துள்ளத்துடித்த உயிர்.. 5 நிமிடத்தில் இளம்பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்.. குவியும் பாராட்டுக்கள்.!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாலாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், இன்று காலை சுமார் 09:40 மணியளவில், வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். அதில் சிலர் சுதாரிப்புடன் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!
பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலர்கள்:
இதனையடுத்து, உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் ராஜு ரெட்டி, தருண் ஆகியோருக்கு தகவல் பரிமாறப்பட்டது.
இருவரும் உடனடியாக பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று, கதவை உடைத்து தூக்கில் தொங்கிய பெண்ணை பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக பெண்ணின் உயிர் தப்பிய நிலையில், அவர் முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் கிடைத்த 5 நிமிடத்திற்குள் அதிகாரிகளின் செயல்
இதையும் படிங்க: 7 மாத கர்ப்பிணியின் வயிற்றில் அமர்ந்து கொடூர கொலை.. சிசு வெளியேறி பெண் துள்ளத்துடிக்க மரணம்.!