காதல் திருமணம் செய்ததால் கொடூரம்; பெண் காவலர் ஆணவக்கொலை.. கழுத்தறுத்து வெறிச்செயல்.!
காதல் திருமணம் செய்ததால் கொடூரம்; பெண் காவலர் ஆணவக்கொலை.. கழுத்தறுத்து வெறிச்செயல்.!
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காவலர், சகோதரரால் ஆணவக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகர் காவல் நிலையத்தில், காவலராக வேலை பார்த்து வருபவர் நாகமணி. இவர் ஸ்ரீகாந்த் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், நட்பாக தொடங்கிய பழக்கம் பின்னாளில் காதலாக மாறி, இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர்.
காதலுக்கு எதிர்ப்பு
இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வால் நாகமணியின் குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: 21 வயது இளம்பெண்ணை கொன்ற புலி.. நொடிப்பொழுதில் நடந்த சோகம்.. உறவினர்கள் கண்ணீர்.!
ஆணவக்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று தனது வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்த நாகமணியை, அவரின் சொந்த சகோதரர் பரமேஷ் என்பவர் காரை மோதி கீழே தள்ளிவிட்டார். பின் காரில் இருந்து இறங்கியவர், தனது சகோதரியை கழுத்தறுத்து கொலை செய்து தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவத்தில் நாகமணி நிகழ்விடத்திலேயே துள்ளத்துடிக்க உயிரிழந்த நிலையில், காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. அதிகாரிகள் நேரில் சென்று காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பரமேசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிளாஸ்டிக், பெனாயால் ஊற்றி போலியாக இஞ்சி-பூண்டு பேஸ்ட் தயாரித்து விநியோகம்; மக்களே உஷார்..!