தந்தை, தாத்தா, மாமா என குடும்பமாக சேர்ந்து சொந்த மகளை சீரழித்த கொடுமை.. ஓராண்டாக அதிர்ச்சி செயல்.!
தந்தை, தாத்தா, மாமா என குடும்பமாக சேர்ந்து சொந்த மகளை சீரழித்த கொடுமை.. ஓராண்டாக அதிர்ச்சி செயல்.!
கடந்த ஓராண்டாக பெற்றெடுத்த மகள் என்றும் பாராத தந்தை, தனது தந்தை, மைத்துனருடன் சேர்ந்து 14 வயது சிறுமியை சீரழித்த துயரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரியா மாவட்டத்தில், 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் தாய் கடந்த 2023 ம் ஆண்டு இயற்கை எய்தினார். இதனால் சிறுமி தனது தந்தை, தாத்தா, மாமாவின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: பலமணி நேரம் குளித்த மருமகள்.. எட்டிப் பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!
தம்பதிகள் கருத்து வேறுபாடு
கடந்த 2020ம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவரை பிரிந்த பெண்மணி மகளுடன் டெல்லியில் வசித்து வந்த நிலையில், மனைவியிடம் பிரச்சனை செய்து மகளை தன்னுடன் அழைத்து வந்து தந்தை வசித்து வந்திருக்கிறார்.
சிறுமி பலாத்காரம்
இதனிடையே, சமீபத்தில் தனது அத்தை வீட்டிற்குச் சென்ற சிறுமி, தன்னை 45 வயதுடைய தந்தை, 70 வயது தாத்தா, 27 வயது மாமா ஆகியோர் தவறாக அணுகுவதாக கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன அத்தை சோதித்தபோது, சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதியானது.
ஓராண்டாக துயரம்
கடந்த ஓராண்டாக இந்த கொடுமை நடந்தது அம்பலமான நிலையில், சிறுமியின் அத்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் மூவரையும் கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: "உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!