"உனக்கு சொத்து தரமாட்டாரு.." தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!
உனக்கு சொத்து தரமாட்டாரு.. தந்தை எரித்து கொலை.!! காதலியுடன் கைது செய்யப்பட்ட மகன்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் சொத்தில் பங்கு தராததால் தந்தை உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரின் மகன் மற்றும் மகனின் காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட கருகிய உடல்
உத்திரபிரதேச மாநிலம் ராமாபூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியான ராமு ராவத் என்பவர் அவருடைய விவசாய நிலத்தில் அமைந்துள்ள கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சிக்கிய மகன்
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட நபரை அவரது மகனே கொன்றது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது மகனான தர்மேஷ் என்பவரை கைது செய்த காவல்துறை அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் தனது தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதையும் படிங்க: அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!
சொத்து தகராறில் கொன்றதாக வாக்குமூலம்
இது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த தர்மேஷ், தனது தந்தை சொத்தில் பங்கு தர மறுத்ததால் தனது காதலி சங்கீதாவுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்து அவரது உடலை எரித்து கிணற்றில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தர்மேஷ் மற்றும் சங்கீதாவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: பீகாரில் பயங்கரம்... கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கொலை.!! வைரல் புகைப்படம்.!!