அப்பளமாக நொறுங்கிய கார்.. ஆன்மீக சுற்றுலாவில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்.!
அப்பளமாக நொறுங்கிய கார்.. ஆன்மீக சுற்றுலாவில் நேர்ந்த சோகம்.. கார் - லாரி மோதி 5 பேர் பரிதாப மரணம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகலா, சிக்கிந்துவாடி சாலையில் இன்று கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரில், மாலே மக்தேஸ்வரா மலைக்கு, ஆனிமேக பயணம் மேற்கொண்டு இருந்த குடும்பத்தினர் பயணித்தனர்.
இவர்களின் கார் குறுகலான பகுதியில் சென்றபோது, எதிர்திசையில் இருந்த லாரி ஒன்று வேகமாக வந்தது. இரண்டு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
5 பேர் பலி
இவ்விப்பதில் காரில் பயணம் செய்த 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பெண்கள் 3 ஆண்கள் என குடும்பமே பரிதாபமாக பலியானது.
இதையும் படிங்க: "கும்பமேளாவுக்கு செல்ல முடியல" 40 அடி குழி தோண்டி பெண்மணி செய்த செயலால் வியப்பு.!
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மைசூர் மற்றும் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினர் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்; தம்பதி எடுத்த விபரீத முடிவால் சோகம்.!