ஆன்லைனில் இனி நீட் தேர்வு? மத்திய கல்வி அமைச்சர் தகவல்.!
ஆன்லைனில் இனி நீட் தேர்வு? மத்திய கல்வி அமைச்சர் தகவல்.!
மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை கேள்விகளாக எழுப்பி வருகின்றனர். இன்று எதிர்க்கட்சிகளின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
ஆன்லைனில் நீட்
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானிடம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், " நிபுணர் குழுவின் அறிக்கையின் பேரில், நீட் தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்படும். இளங்கலை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு, ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: திடீரென பிரேக் அடித்த லாரி.. தனியார் பேருந்தின் வேகத்தால் 6 பேர் பரிதாப பலி..!
உயர்கல்வி நுழைவுத்தேர்வு
சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனையும் நடைபெறுகிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப உதவியோடு, நவீன முறைகளில் தேர்வுகள் நடைபெறும். 2025ல் இருந்து உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு என்.டி.ஏ சார்பில் நடைபெறும்" என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயப்பன் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; பக்தர் தற்கொலை.!