ஐயப்பன் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; பக்தர் தற்கொலை.!
ஐயப்பன் கோவிலில் பெரும் அசம்பாவிதம்; பக்தர் தற்கொலை.!
மாலை அணிவித்து விரதம் இருந்து ஐயப்பன் கோவில் சென்ற பக்தர் தற்கொலை செய்துகொண்டார்.
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சென்று வருவது வழக்கம். கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலையில் இருக்கும் ஐயப்ப சாஸ்தா, தமிழகம் மட்டுமல்லாது தெலுங்கானா, ஆந்திரா மாநிலத்திலும் தனது பக்தர்களை கொண்டுள்ளார்.
இதனிடையே, 2025 ம் ஆண்டுக்கான சபரிமலை சன்னிதான தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று பெரும் அசம்பாவிதம் ஒன்று அங்கு நடந்தது.
இதையும் படிங்க: 150 ஏக்கர் நில மோசடியை அம்பலப்படுத்திய இளைஞர் மர்ம மரணம்.. மீட்கப்பட்ட மண்டை ஓடு.!
பக்தர் தற்கொலை
பக்தர்களுக்கு நெய் பிரசாதம் வழங்கும் பகுதியில், சபரிமலைக்கு மாலை அணிவித்து வந்திருந்த பக்தர், திடீரென கட்டிடத்தின் மேல் பகுதிக்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், அவரின் உடலில் இருந்து உயிர் சில நிமிடங்களில் பிரிந்தது. இந்த சம்பவம் சக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்திள்ள நிலையில், அவரின் அடையாளம் காணப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவி டார்ச்சர்.. தலைமை காவலர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!