கோவா ஹனிமூனில், நள்ளிரவு கணவன் செய்த செயல்.. போலீசிற்கு ஓடிச்சென்ற மனைவி.!
கோவா ஹனிமூனில், நள்ளிரவு கணவன் செய்த செயல்.. போலீசிற்கு ஓடிச்சென்ற மனைவி.!

வரதட்சணைக்காக எச்ஐவி ஊசி
என்னதான் பெண்களுக்கான சட்ட திட்டங்கள் வந்துவிட்டது சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று வாயளவில் பேசினாலும் இன்னும் திருமண உறவில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறைந்த பாடில்லை. வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் தான் இன்னமும் நமது நாடு இருக்கிறது.
10 நாட்களுக்கு முன்பாக ஊட்டியில் வரதட்சணைக்காக ஒரு பெண்ணின் மாமியார் எச்ஐவி ஊசியை தனது மருமகளுக்கு செலுத்தி அவரது உடல் நலனை கெடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டிருப்போம்.
இதையும் படிங்க: நடுரோட்டில் நொடியில் வழிப்பறி.. வேடிக்கை பார்த்த மக்கள்.. பைக்கை களவாடி ஓடிய கூட்டம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
10 நாளில் போலீசுக்கு சென்ற பெண் :
அந்த வகையில், தற்போது உத்தர பிரதேசத்தில் இன்னொரு கொடுமை சம்பவமும் அரங்கேறியுள்ளது. கடந்த பிப்ரவரி 12 டாக்டர் ரத்னேஷ் குப்தா என்பவருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகிய 10 நாட்களில் அவரது மனைவி போலீசில் சென்று கொடுமை தாங்காமல் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் அப்பெண், "திருமணம் முடிந்து மிக மகிழ்ச்சியாக கணவரின் வீட்டிற்குள் சென்றேன். ஆனால், வரதனை வரதட்சனை கேட்டு என்னை மிக மோசமாக தாக்கினார்கள். பெற்றோரிடம் இதை சொன்ன போது என்னை அமைதிப்படுத்தி அங்கே இருக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்.
ஹனிமூனுக்காக கோவா பயணம்
அதன் பின் பிப்ரவரி 19 கணவருடன் ஹனிமூனுக்காக கோவா சென்றேன். அங்கும் நாங்கள் சந்தோஷமாக இல்லை. அறையில் வைத்து நள்ளிரவு நேரத்தில் என் கணவர் என்னை மிகக் கடுமையாக தாக்கினார். என்னை கழுத்தை நெறித்து கொலை செய்து விடுவேன்." என்று மிரட்டினார்.
7 பேர் மீது வழக்கு :
இது பற்றி எல்லாம் எனது பெற்றோரிடம் சொன்ன பிறகுதான் என்னை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அதுவரை அங்கேயே இருக்க சொல்லி என்னை வற்புறுத்தினார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
தற்போது கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் பேரில் மீது வரதட்சணை புகார் பதிவாகி இருக்கிறது. இவர்கள் மீதான குற்றங்கள் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐயோ எங்களை கொல்லுறானே! நள்ளிரவில் தம்பதியின் அலறல்.. தலைதெறிக்க ஓடிய மகன்.. மரண ஓலத்தால் நடுங்கிய மக்கள்.!