இனிப்பு, ஆனால், திகட்டாத.. அவல் பாயாசம்.. சட்டுனு ரெடி பன்னி, அசத்தலாம் வாங்க.!
மணக்க மணக்க நெய் வாசனையுடன் அவல் பாயாசம்... மிஸ் பண்ணிடாதீங்க.. ஒரு முறை டிரை பண்ணி பாருங்க..! இனிப்பு, ஆனால், திகட்டாத.. அவல் பாயாசம்.. சட்டுனு ரெடி பன்னி, அசத்தலாம் வாங்க.!
பொதுவாக பாயாசம் பலருக்கும் பிடித்த ஒரு இனிப்பு வகை. சேமியா பாயாசம், பால் பாயாசம், அவல் பாயாசம் என பல வகை உண்டு. இதில் அவல் பாயாசம் எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
பால் - 3 கப்
அவல் - 1 கப்
ஏலக்காய் தூள் - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - 15
உலர் திராட்சை - 15
நெய் - 1/4 கப்
வெல்லம் - 3/4 கப்
செய்முறை :
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். பின்பு, அதில் 2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் 15 முந்திரிப்பருப்பு மற்றும் 15 உலர் திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: மழைக்கு இதமாக சூடான, சுவையான மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ்.. டக்குனு செய்யலாம்.. ரெசிபி இதோ..!
இப்போது, அதே நெய்யில் ஒரு கப் அவல் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு, அந்த பாத்திரத்தில் 3 கப் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு, அந்த பாலில் வறுத்த அவலை சேர்த்து அவலை நன்றாக வேக விடவும். இப்போது, மற்றொரு பாத்திரத்தில் 3/4 கப் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்பு, அவல் நன்றாக வெந்து பால் குறைந்து வரும் நிலையில் வெல்லக்கரைசலை சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். இப்போது, அதில் வறுத்து வைத்த முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் தூள், மீதம் இருக்கும் நெய் சேர்த்து கலந்து இறக்கி விட வேண்டும். இப்போது, மணக்க மணக்க அவல் பாயாசம் தயார்.
இதையும் படிங்க: சூடான சோறுக்கு ஏற்ற., சுவையான வெண்டைக்காய் துவையல் செய்வது எப்படி?