ஆட்டு குடல் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.!?
ஆட்டு குடல் குழம்பு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.. டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்.!?
ஆட்டுக்குடலில் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டுக்குடல் - 1,
இஞ்சி சின்ன துண்டு - 1,
பூண்டு - 5,
சின்ன வெங்காயம் - 50 கிராம்,
தேங்காய் துருவல் - 1/2 கப்,
பெரிய வெங்காயம் - 150 கிராம்,
தக்காளி - 200 கிராம்,
மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்,
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்,
சோம்பு - 1 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
பட்டை - 2,
இலவங்கம் - 2,
ஏலக்காய் - 1,
நல்லெண்ணெய், உப்பு, கொத்தமல்லி இலை தேவையான அளவு
செய்முறை
ஆட்டு குடல் குழம்பு செய்ய முதலில் தேவையான அளவு வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி போன்றவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி இஞ்சி, பூண்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் பின்பு குடலை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயம், தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: குளிர் காலத்தில் அதிகமாக டீ குடிக்கிறீங்களா.!? உங்களுக்குதான் இந்த அதிர்ச்சி செய்தி.!
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, இலவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்து பின்பு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். பின்பு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்பு தக்காளி சேர்க்க வேண்டும். அதில் மல்லி தூள், மிளகாய் தூள், சோம்பு, சீரக பொடி, உப்பு போன்றவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி 10 விசில் விட வேண்டும். பின்னர் அதில் தேங்காய் பாலை ஊற்றி 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான ஆட்டு குடல் குழம்பு தயார்.
ஆட்டு குடல் கறி குழம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள்
ஆட்டு குடலில் அதிகமாக புரோட்டின் நிறைந்துள்ளது. மேலும் இதில் மெக்னீசியம், ஜிங்க், செலீனியம், வைட்டமின் கே, வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்பு சத்து, போன்ற சத்துகளும், கொழுப்பில் கரையக்கூடிய பல வைட்டமின்களும், மினரல்களும் அதிகமாக உள்ளது. எனவே ஆட்டு குடல் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு நன்மையை தரும்.
இதையும் படிங்க: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்ரிக்காட் பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!?