உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடம்பில் நடக்கும் அதிசயம் பாருங்க.....
உடல் எடையை ஈஸியா குறைக்கணுமா? அப்போ இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடம்பில் நடக்கும் அதிசயம் பாருங்க.....

நமது அன்றாட வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் எடை அதிகாரிப்பால் உடலில் பல்வேறு விதமான நோயினால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகள் செய்தும் பலர் உடல் எடையை குறைக்க முடியாமலும் தன்னம்பிக்கை இல்லாமலும் பல விதமான கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.
மேலும் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதுபோல குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை மட்டுமே அதிகமாக சாப்பிட வேண்டும்.
இந்நிலையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களது உணவில் அதிக அளவு காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவற்றில் தான் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை செரிமானத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: 60 வயதிலும் துள்ளி குதிக்க வைக்கும் இயற்கை மூலிகை.! வேறு என்னென்ன நன்மைகள் தரும்.!?
உடல் எடையை குறைக்க கீரையை உங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும். மேலும் இது தொப்பை குறைக்கவும் உதவும். அடுத்தப்படியாக அன்றாட உணவில் கேரட்டை அதிகம் சாப்பிட வேண்டும். இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் பல வைகையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவே உள்ளன. அவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவிகிறது.
மேலும் அதிக புரதஉணவான காளானை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி எடையை மற்றும் கொழுப்பை எரிக்க உதவும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.
அடுத்தப்படியாக நமது உணவில் குடைமிளகாய்யை அதிகம் உண்பதனாலும் உடல் எடையை குறைக்க உதவுமாம். இதில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளன. குடைமிளகாய் உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைக்கவும், உடல் எடையை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: வீட்டில் அடிக்கடி சண்டையா? மனஅமைதியை பெற்று உங்கள் வாழ்க்கையில் சந்தோசம் பொங்கணுமா ! அப்போ இதெல்லாம் பண்ணுங்க.....