அடிக்கடி தலைவலி வருகிறதா.? இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.!?
அடிக்கடி தலைவலி வருகிறதா.? இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் மொபைல், கம்ப்யூட்டர் போன்றவற்றின் முன்பே அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் தலைவலி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பொதுவான பிரச்சினையாக ஆகிவிட்டது. ஆனாலும் தலைவலி என்பது ஏதாவது ஒரு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். எனவே தலைவலி எதனால் வருகிறது என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக காணலாம்.
தலைவலி வருவதற்கான காரணங்கள்
1. ஒற்றைத் தலைவலி - ஒற்றைத் தலைவலி என்பது தீவிரமான தலைவலியாகும். தலையில் ஒரு பக்கத்தில் கடுமையான வலி, வாந்தி, கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து தேவையான மருந்து எடுத்து கொள்வது நல்லது.
2. உயர் ரத்த அழுத்தம் - இரத்த அழுத்தம் திடீரென்று அதிகரித்தால் தலைவலி வரும். எனவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் தலைவலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
3. பதட்டம் - ஒரு சிலருக்கு மன அழுத்தம், பதட்டம், பயம் போன்றவற்றினாலும் தலைவலி ஏற்படும். இந்த காரணங்களினால் தலைவலி ஏற்பட்டால் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு வழிவகை செய்யும். எனவே மனப்பதட்டம், பயம் இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து தீர்வு காண்பது நல்லது.
4. தொற்று - தலையில் முன் பகுதி மற்றும் நெற்றி பகுதியில் கடுமையாக வலி இருந்தால் சைனஸ் மற்றும் மூளை தொற்று நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும் சில நேரங்களில் ஒரு சிலருக்கு அதீத வாசனை நுகர்ந்து பார்த்தாலும் தலைவலி ஏற்படும்.
5. மூளை கட்டி - தலைவலியுடன் காய்ச்சல் வாந்தி தலைசுற்று, பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் இருந்தால் மூளை கட்டி நோயின் அறிகுறியாக இருக்கலாம். தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
இதையும் படிங்க: எச்சரிக்கை.! ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் கண்டிப்பாக குடிக்கக்கூடாது... ஏன் தெரியுமா.!?
இதையும் படிங்க: காலை நேரத்தில் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா.!?