இறப்பு வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன் தெரியுமா.?! இதில் இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா.?!
இறப்பு வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிப்பது ஏன் தெரியுமா.?! இதில் இப்படி ஒரு சங்கதி இருக்கிறதா.?!
பொதுவாக வெளிநாடுகளில் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவரது உடலில் கருவி மூலமாக சளி, சிறுநீர், மலம் போன்றவற்றை அகற்றி உடலை கழுவி சுத்தப்படுத்தி எம்பார்ம் செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பார்கள். ஆனால், நம் நாட்டில் அதுபோன்ற விஷயங்களை எல்லாம் பார்க்க முடிவதில்லை.
மேலும், இது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்றும் கூட கூறலாம். ஏழையாக இருப்பவர்களுக்கு வயிறு, வாய், மார்பு உள்ளிட்டவற்றில் இருக்கும் எச்சங்கள் இறந்த பின் வெளியேறத்தான் செய்யும். இதை தவறான விஷயமாக பார்க்க முடியாது. இதற்காகத்தான் வாய்க்கரிசியை வாயில் வைத்து திணிப்பதும், மூக்கில் பஞ்சை வைத்து அடைப்பதும், தலையை துணியை கொண்டு கட்டி வாயை மூடுவதும் செய்கிறார்கள்.
இது தவிர உடலில் இருக்கும் மலம் மற்றும் சிறுநீர் உள்ளிட்டவற்றை நம்மால் தடுக்க முடியாது. இது அவரது உடலில் தான் இருக்கும். எனவே, தான் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று வந்தவுடன் நமது உடலை சுத்தப்படுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குதிரைவாலியில் பூரண கொழுக்கட்டை.. அசத்தல் சுவையில் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.! உடனே ட்ரை பண்ணுங்க.!
சமீப காலமாக நிறைய வீடுகளில் இதை பின்பற்றுவது இல்லை. இது சடங்குகாக என்று மட்டும் கூறி விட முடியாது. இது தன்சுத்தத்தை மற்றும் சுகாதாரம், ஆரோக்கியத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு விஷயம் ஆகும்.
இதையும் படிங்க: ருசியான நாட்டுக்கோழி ரசம்.! சளி, இருமலுக்கு உடனடி தீர்வு.. எப்படி செய்வது.?!