பெரியாருக்கு எதிராக புலம்பும் சீமானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; பரிதாபமா இருக்கு.! சத்யராஜ் கலாய்.!!
பெரியாருக்கு எதிராக புலம்பும் சீமானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; பரிதாபமா இருக்கு.! சத்யராஜ் கலாய்.!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிரான சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 70 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கடும் எதிர்ப்பும் பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், பெரியாருக்கு எதிராக பேசுவோர் குறித்து நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், "தந்தை பெரியாரின் திராவிட கழகத்தின் அடி நாதம் சமூகநீதி. இதனை விளக்கிச்சொல்லி, அதில் குறைகள், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட, நாங்கள் வந்து அதனை சரி செய்வோம் என பேசலாம். அரசியலுக்காக புதிதுபுதிதாக பேசுவோரை பார்த்து பாவமாக இருக்கிறது. 100 ஆண்டுகளாக இதனை பேசுகிறார்கள். புதுமுகங்களை பார்த்து நாம் பரிதாபப்படுத்த வேண்டும். சமூகநீதி திராவிட கருத்தியலை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல காட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரியில் பதற்றம்.. நாம் தமிழர் - தந்தை பெரியார் இயக்க நிர்வாகிகள் தள்ளுமுள்ளு.., மோதல் சூழல்.!
சத்யராஜின் அனுதாபங்கள்
ராகுல் காந்தி, பினராயி விஜயன் ஆகியோர் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். திராவிடம் பெயர் வைத்துள்ள கட்சிகள் பெரியாரை ஏற்றுக்கொள்வார்கள். திராவிட கழகம், திமுக, அஇஅதிமுக, தேமுதிக, மதிமுக என பல திராவிட கட்சிகள் பெரியாரை ஏற்றுக்கொண்டுள்ள. இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அய்யா ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகியோர் பெரியாரை இழிவுபடுத்திய நபர்களுக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். பெரியாருக்கு எதிராக பேசுவோரை பார்த்து அனுதாபம் தான் தெரிவிக்க வேண்டும். புலம்பும் நண்பர்களுக்கு அனுதாபங்கள்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: சீமானுக்கு ஆதரவு: "நான் தரேன் ஆதாரம்" அண்ணாமலை பாய்ச்சல்.!