பாஜகவில் இருந்து புறக்கணிக்கப்படும் நடிகை குஷ்பூ - லீக்கான ஆடியோ.. தமிழக அரசியலில் பரபரப்பு.!
பாஜகவில் இருந்து புறக்கணிக்கப்படும் நடிகை குஷ்பூ - லீக்கான ஆடியோ.. தமிழக அரசியலில் பரபரப்பு.!
நான் தனிப்பட்ட முறையில் யாரையும் கட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து இல்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் அவரவர் வந்துவிடுவார்கள் என அண்ணாமலை கூறினார்.
தமிழக சினிமாவிலும், அரசியலிலும் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த பெண் குஷ்பூ. கடந்த 2010ம் ஆண்டு முதல் அரசியலில் களமிறங்கி பொதுவாழ்க்கையை தொடங்கியவர், தைரியமாக தனது கருத்துக்களை முன்வைக்கும் நபராகவும் அறியப்படுகிறார்.
திமுகவில் தொடங்கிய அவரின் அரசியல்பயணம் 2014 முதல் காங்கிரஸ், 2021ல் பாஜக என தொடர்ந்தது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியாளராக களமிறங்கி தோல்வியை தழுவினார்.
இதையும் படிங்க: "அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி., பயந்தாங்கொள்ளி பழனிச்சாமி" - அமைச்சர் கே.என் நேரு நேரடி தாக்கு.!
கட்சி நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை - குற்றச்சாட்டும் விளக்கமும்
சமீபத்தில் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் படப்பிடிப்பு உட்பட பிற பணிகளில் பிசியாக இருப்பதாக கவனிக்கப்பட்டது. இதனிடையே, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு குஷ்பூ அளித்த பேட்டியின் ஆடியோ லீக் ஆகியுள்ளது.
இந்த விசயத்திற்கு பதில் தெரிவித்த அண்ணாமலை, "நான் யாரையுமே கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து இல்லை. அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு கட்சி பொறுப்பாளர்கள் வருவார்கள். எந்த கட்சியிலும் மாநில தலைவர் நிர்வாகிகளை அழைப்பது இல்லை. அதற்கான அமைப்பு பொறுப்பாளரிடம் பேசுங்கள், அவர்தான் அப்பணியை கவனிப்பார்" என கூறினார்.
பாஜக தன்னை புறக்கணிப்பதாக கூறும் ஆடியோ
குஷ்பூ விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம்
வீடியோ நன்றிமாலைமுரசு
இதையும் படிங்க: சினிமாவில் சரிவை சந்தித்ததால் தான் விஜய் அரசியலுக்கு வந்தார்; திமுக ஆர்.எஸ் பாரதி பேட்டி.!