சினிமாவில் சரிவை சந்தித்ததால் தான் விஜய் அரசியலுக்கு வந்தார்; திமுக ஆர்.எஸ் பாரதி பேட்டி.!
சினிமாவில் சரிவை சந்தித்ததால் தான் விஜய் அரசியலுக்கு வந்தார்; திமுக ஆர்.எஸ் பாரதி பேட்டி.!
சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய், 200 தொகுதிகள் என கனவுகண்டு வரும் கட்சியின் எண்ணத்தை மக்கள் மைனஸ் ஆக்குவார்கள் என பேசி இருந்தார். மேலும், ஒரே கட்சி ஆட்சி செய்ய இங்கு மன்னராட்சி நடைபெறுகிறதா? என விசிக கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார்.
திமுக தரப்பு எதிர்ப்பு
இந்த விசயத்திற்கு கடுமையான எதிர்ப்பு திருமுக தரப்பில் கிளம்பியுள்ள நிலையில், நடிகை விஜயின் ஒவ்வொரு பேச்சுக்கும் திமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் தங்களின் எதிர்புக்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபுவும், களத்திற்கே வராத தற்குறி விஜய் என வசைபாடி இருந்தார்.
இதையும் படிங்க: "களத்திற்கே வராத அதிமேதாவி" - நடிகர் விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி.!
ஆர்.எஸ் பாரதி
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசுகையில், "திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது. எந்த விதமான சந்தேகமும் இதில் வேண்டாம். திமுக கூட்டணியை யாராலும் முறியடிக்க இயலாது. நடிகர் விஜய் மைனஸ் ஆக போகிறார். அவர் கலையுலகில் மைனஸ் ஆனதால், அரசியலுக்கு வந்துள்ளார். கூட்டணி குறித்து யாருக்கும் சந்தேகம் வேண்டாம்" என பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை 2 நாட்கள் கூடுகிறது; சபாநாயகர் அப்பாவு.!