நில மோசடி விவகாரம்: முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.!!
நில மோசடி விவகாரம்: முன்னாள் முதல்வருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்.!!
சட்டத்திற்கு புறம்பான பணப் பரிமாற்றம் மற்றும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருக்கிறது.
நில மோசடி மற்றும் பண பரிமாற்ற வழக்கில் கைது
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான இவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி சட்டத்திற்கு புறம்பான வகையில் பணப்பரிமாற்றம் செய்ததாகவும் நில மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை இவரை கைது செய்தது.
பதவி விலகல் மற்றும் சிறை
ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று ஜார்க்கண்ட் முக்தி முர்சா கட்சியை சேர்ந்த சிபு சோரன் புதிய முதல்வராக பதவியேற்றார். முன்னாள் முதல்வரான ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: மதுபானக்கொள்கை ஊழல் விவகாரம்; மீண்டும் கைது செய்யப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.!
ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்
இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருக்கிறது. 6 மாத சிறைக்குப் பிறகு இன்று முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இவரது கைதும் பாஜக அரசின் பழிவாங்கல் நடவடிக்கையாக அரர்சியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: பரபரப்பு... ஆளுநரை சந்தித்த இபிஎஸ்.!! முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்.!!