#Breaking: கையில் கட்டையுடன் காத்திருக்கும் நாதக நிர்வாகிகள்.. சென்னையில் பதற்றம்.! காவல்துறை குவிப்பு.!
#Breaking: கையில் கட்டையுடன் காத்திருக்கும் நாதக நிர்வாகிகள்.. சென்னையில் பதற்றம்.! காவல்துறை குவிப்பு.!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஜனவரி 08ம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈ.வே இராமசாமி பெரியார் குறித்து சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசி இருந்தார்.
இந்த விஷயம் பெரியாரிய உணர்வாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவே, சீமானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரின் வீடும் முற்றுகையிடப்பட்டது. ஜனவரி 22ம் தேதியான இன்று, மீண்டும் சீமானின் வீடு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
காவல்துறை குவிப்பு
இதனால் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் சீமானின் நீலாங்கரை இல்லத்தில் குவிந்துள்ளனர். காவல்துறையினர் 250 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நாதக மகளிர் அணியினர் கையில் தடியுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ஒருத்தன் துணிந்துவிட்டால் உன் நிலைமை என்ன? - சீமானுக்கு ஆர்.எஸ் பாரதி பகிரங்க எச்சரிக்கை...!
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சீமான் ஒரு புலி. புலியை எதிர்க்க பல பன்னிகுட்டிகள் வருகிறது. அவர்கள் தாக்குதல் நடத்தினால், நாங்களும் அதே ஆயுதத்தை எடுப்போம். கருத்தியல் ரீதியாக மோதுங்கள். கருத்தை விடுத்து கடந்த வாரம் போல வேறு நடவடிக்கையில் இறங்கினால் நாங்களும் அதே நடவடிக்கையில் இறங்குவோம்" என நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணியினர் குவிந்துள்ளனர்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பந்தல் அமைத்து தங்கி இருக்கின்றனர். இதனால் சீமான் வீடு பரபரப்பு சூழலை சந்தித்து இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: புதுச்சேரியில் பதற்றம்.. நாம் தமிழர் - தந்தை பெரியார் இயக்க நிர்வாகிகள் தள்ளுமுள்ளு.., மோதல் சூழல்.!