"சீமானின் பாலியல் வழக்கு." 'பொய் வழக்கு அரசியல்' அன்புமணி ஆவேசம்.!
சீமானின் பாலியல் வழக்கு. 'பொய் வழக்கு அரசியல்' அன்புமணி ஆவேசம்.!
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கு குறித்த விசாரணைக்கு தான் வரமாட்டேன் என்று சீமான் தெரிவித்து இருந்த நிலையில் நேற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். மேலும் அவர் நடிகை விஜயலட்சுமி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில், சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கு பற்றி பாமக அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "போலீசார் கள்ள சாராயத்தை ஒழிப்பதிலோ சட்ட ஒழுங்கை பாதுகாப்பதிலோ கஞ்சாவை ஒழிப்பதிலோ கவனம் செலுத்தவில்லை.
வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு திமுகவுக்கு எதிராக செயல்படும் அரசியல் கட்சிகளை துன்புறுத்துவது, பொய் வழக்கு போடுவது போன்றவற்றில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: #Breaking : விஜயலக்ஷ்மி அதிரடியாக அடுத்த வீடியோ வெளியீடு.! "அசிங்கம் புடிச்சவனே" என சீற்றம்.!
கடந்த மாதத்தில் தமிழகத்தில் நிறைய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கின்றனர். போலீசார் இதை அவர்களது தனிப்பட்ட விஷயம் என சொல்வது அசிங்கம் இல்லையா? தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை நடந்தால் அவன் கதை அவ்வளவுதான் என்ற பயத்தை போலீசார் உருவாக்க வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்கள் முடிவுக்கு வரும்." என்று தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சீமானுக்கு எதிரான வழக்கில் கஸ்தூரி யார் பக்கம்? ஒரேயொரு கேள்வியால் களேபரம்.!