சிரிப்பு, கொண்டாட்டம்.. டெல்லியில் பாஜக ஆட்சி., தமிழிசை உச்சகட்ட மகிழ்ச்சி.. அடுக்கு மொழியில் கலாய்.!.!
சிரிப்பு, கொண்டாட்டம்.. டெல்லியில் பாஜக ஆட்சி., தமிழிசை உச்சகட்ட மகிழ்ச்சி.. அடுக்கு மொழியில் கலாய்.!.!

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி அடைந்து, பாஜக 23 ஆண்டுகளுக்கு பின் ஆட்சி வருவதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை கமலாலயத்தில் செய்திலாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், "தலைநகரில் பாஜக தலைநிமிர்கிறது, ஆம் ஆத்மி தலை குனிகிறது, காங்கிரஸ் நிலைகுலைகிறது. டெல்லி மாநில பாஜகவினருக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். டெல்லி மாநில முடிவுகள் மகிழ்ச்சியை தருகிறது. தமிழ்நாட்டில் இருந்தும் பல தலைவர்கள் டெல்லிக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தனர். டெல்லியில் பாஜக அடைந்துள்ள வெற்றி மிகப்பெரியது.
இதையும் படிங்க: "என் நெஞ்சமெல்லாம் பதறுகிறது., ஒரு ஆணியை கூட.," - அண்ணாமலை கடும் கண்டனம்..!
பாஜக தலைமையிலான கட்சி, டெல்லியில் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் என டெல்லி மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து இருக்கின்றனர். தலைநகரில் தாமரை மலர்வதைப்போல், 2026ல் தமிழ்நாட்டில் தாமரை மலரும். எங்களுக்கு அந்த நம்பிக்கை டெல்லி வெற்றியின் வாயிலாக ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வளர்ச்சித்தங்களை முன்னெடுத்து இருக்கிறது. கடந்த காலத்தில் ஊழலை ஒழிப்போம் என கூறி ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டதால் மக்கள் அவரை நம்பவில்லை.
ஊழலை ஒழிப்போம், மாசை கட்டுப்படுத்துவோம், சுற்றுசூழலை காப்போம், மின்சாரத்தை முறைப்படுத்துவோம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவோம் என பல வாக்குறுதியை அளித்து, அதனை நிறைவேற்றாத காரணத்தால், மக்கள் அவரை ஒதுக்கி விட்டனர். இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்து இருக்கிறார்.
திமுக அங்கம் வங்கிக்கும் இந்தி கூட்டணி, ஒரு தேர்தலை கூட ஒற்றுமையாக எதிர்கொண்டது இல்லை. இதனால் காங்கிரஸ் டெல்லியில் ஹாட்ரிக் என 3 முறை தோல்வி அடைந்து இருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சி, டெல்லியில் தனது ஆட்சியை இழந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள், இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இடத்திலும் டெல்லியில் பாஜக வெற்றி அடைந்துள்ளது. இதனால் பாஜகவுக்கு எதிராக திமுக வைக்கும் பொய் பிரச்சாரத்தை இனியும் மக்கள் நம்ப மாட்ட்டார்கள். திமுக இவ்வாறான அவதூறு பரப்புவதை இனி தவிர்க்க வேண்டும். திமுகவுக்கு ஈரோடு வெற்றி தோல்விகரமான வெற்றியே" என பேசினார்.
இதையும் படிங்க: மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் இராமநாதபுரம் எம்.பி.. எல்.முருகன் கண்டனம்.. காரணம் என்ன?