தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் இராமநாதபுரம் எம்.பி.. எல்.முருகன் கண்டனம்.. காரணம் என்ன?

மக்களிடத்தில் பிரிவினையை தூண்டும் இராமநாதபுரம் எம்.பி.. எல்.முருகன் கண்டனம்.. காரணம் என்ன?

L Murugan Condemn on Ramanathapuram K NavasKani MP Advertisement

 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் கோவில் உள்ளது. இது பாண்டியர்களின் காலத்தில் இருந்து வழிபாட்டில் இருக்கும் கோவில் ஆகும். இதே மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்து - இஸ்லாமிய மதத்தினர் அவரவர் இறைவனை வழிபட்டு வந்தனர். இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், குடுமபத்துடன் சிக்கந்தர் தர்காவுக்கு சென்று ஆடு பலி கொடுத்து குடும்பத்துடன் அவரின் இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது மலைமீது முருகன் கோவில் இருப்பதால், தர்காவில் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள், பலி நடவடிக்கை கூடாது என காவலர்கள் சார்பில் தடுக்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணி எம்பி செயல் 

இதனால் சர்ச்சை உண்டாக, கடந்த ஒரு வாரமாக சிக்கந்தர் தர்காவுக்கு சென்று அசைவம் சமைத்து சமபந்தி விருந்து வைக்க வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. இதன் ஒரு பகுதியாக, நேற்று இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் நவாஸ் கனி தலைமையில், சிக்கந்தர் தர்காவுக்கு சென்று, முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் அசைவம் வைத்து சாப்பிட்டார். இந்த விஷயம் குறித்த தகவல், எம்பியின் பேட்டி வாயிலாக உறுதி செய்யப்பட்ட நிலையில், இதற்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.! 

l murugan

எல் முருகன் கண்டனம் 

தமிழர் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன். மதநல்லிணக்கம் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக கூறிவிட்டு, இந்து சமுதாய மக்களின் புனித மலையாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அமர்ந்து கும்பலாக சென்று அசைவம் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மதநல்லிணக்க பண்போடு அமைதியாக இருந்து வந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற நோக்கில், ஒரு பிரிவினைவாதியைப் போல் செயல்பட்டிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி.

அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை திசை திருப்பும் நோக்கத்தோடு, திருப்பரங்குன்றம் மலைமீது சென்று அசைவ விருந்து அளிக்க முற்பட்டவர்களால் ஏற்பட்ட பதற்றமான சூழலை, ரகசியப் பிரமாணம் மேற்கொண்டு பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மேலும் பதற்றமானதாக மாற்றுவது எப்படி ஏற்கத்தக்கதாகும். மேலும், தமிழகத்தில் எல்லோருக்குமான மற்றும் சமூகநீதி ஆட்சி வழங்குவதாக கூறிக்கொள்ளும் போலி திராவிட மாடல் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், இந்து சமுதாய விரோதப் போக்கை கைவிடப் போவதில்லை என்பதும் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது சமூகத்தின் அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும். ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி மேற்கொண்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்செயல் புரிந்ததற்காக தமிழக மக்களிடத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர் - அண்ணாமலை புகழாரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#l murugan #bjp #madurai #Thiruparangundram #TN politics #திருப்பரங்குன்றம் #மதுரை #எல் முருகன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story