#Breaking: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு.. பிசிசிஐ அறிவிப்பு.!
#Breaking: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு.. பிசிசிஐ அறிவிப்பு.!

பாகிஸ்தான் தலைமையேற்று நடத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இறுதிப்போட்டி துபாயில் மார்ச் 9 அன்று நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மோதிய இந்தியா - நியூசிலாந்து அணிகளில், இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, உலகளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. வெற்றிக்கோப்பை மற்றும் ரூ.20 கோடி பரிசுடன் இந்திய அணி தாயகம் திரும்பியது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி 2025 பைனலில் இந்தியா.. மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான்.!
ரூ.58 கோடி பரிசு அறிவிப்பு
ஒட்டுமொத்த தொடரின் நாயகனாக நியூசிலாந்து அணியின் வீரர் ரசின் ரவீந்திரா, ரோஹித் சர்மா அன்றைய ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணிக்கு, ஒட்டுமொத்த இந்தியாவும் வாழ்த்துக்களை தெரிவித்தது.
இந்நிலையில், பிசிசிஐ ரூ.58 கோடி பரிசுத்தொகையை இந்திய வீரர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த தொகை போட்டியில் விளையாடிய வீரர்கள், பயிற்சியாளர், பிற அதிகாரிகள், செலக்சன் கமிட்டியில் இடம்பெற்றவர்கள் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும்.
இதையும் படிங்க: 13 வயது சிறுவனுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பளித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!