சாம்பியன்ஸ் ட்ராபி 2025 பைனலில் இந்தியா.. மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான்.!
சாம்பியன்ஸ் ட்ராபி 2025 பைனலில் இந்தியா.. மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான்.!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி பயணத்தை நெருங்கியுள்ளது. இன்று நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டியில், இந்திய அணி திரில் வெற்றி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
நடப்பு சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் நாடு தலைமையேற்று நடத்திய நிலையில், இந்தியா தனது வீரர்களை பாதுகாப்பு காரணத்திற்காக பாகிஸ்தான் அனுப்ப மறுத்துவிட்டது.
இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறாமல் துபாயில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தான் எதிர்கொண்ட போட்டியில் தோல்வியை தழுவி முன்னரே தொடரில் இருந்து விலகியது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ரசிகையுடன் செல்பி எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ்.. வீடியோ வைரல்.!
பைனலுக்கு தேர்வான இந்தியா
சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டியில், அவர்களின் தரம் மிகப்பெரிய கேள்விக்குறி, அவமதிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்தியா செமி பைனலில் வெற்றி அடைந்து, பைனலுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளது.
ஒருவேளை இந்தியா போல பாகிஸ்தானும் வெற்றி என்ற நிலைக்கு போராடி இருந்தால், இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தானை எதிர்கொள்ளும் நிலை கூட வந்திருக்கலாம். ஆனால், எதற்கும் வாய்ப்புகள் அமையவில்லை.
பாகிஸ்தான் தலைமையேற்று நடத்தும் போட்டி, பாகிஸ்தானில் இறுதி போட்டியை காணாமல் அந்நிய மண்ணில் காண்பது அந்த நாட்டவருக்கு வருத்தமான செய்தியே எனினும், இந்த விஷயத்தில் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் பாகிஸ்தான் இந்தியாவை போல வலிமையான நாடாக உருவாக வேண்டும் என்ற அவசியத்தை கிரிக்கெட் ஆட்டம் உணர்த்திவிட்டது.
மீண்டு வாருங்கள்.. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்களுடன் ரசிகர்களாக..
இதையும் படிங்க: பந்துவீச்சில் அசத்திய ரேணுகா.. டெல்லி - பெங்களூர் பெண்கள் கிரிக்கெட்டில் அசத்தல் ஆட்டம்.!