வேட்டி-சட்டையுடன் திருமண விழாவில் கலந்துகொண்ட தல தோனி; வீடியோ வைரல்.!
வேட்டி-சட்டையுடன் திருமண விழாவில் கலந்துகொண்ட தல தோனி; வீடியோ வைரல்.!

ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள், மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான தல தோனி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்து, தனது தீவிர பயிற்சியை தொடங்கி இருக்கிறார்.
அவரின் பயிற்சி தொடர்பான வீடியோ அவ்வப்போது சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டு வருகிறது. இன்று தோனி வேட்டி-சட்டை அணிந்து இருந்த புகைப்படம் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைப்பக்கத்தில் வெளியாகி இருந்தது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி 2025 பைனலில் இந்தியா.. மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான்.!
இந்நிலையில், தோனி மற்றும் கெதர் ஜாதவ் ஆகியோர், திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை என பலராலும் அழைக்கப்படும் தோனி, தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் தோன்றி இருந்தது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ரசிகையுடன் செல்பி எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ்.. வீடியோ வைரல்.!