9 வியாழன்கள் சாய் பாபா விரதம்.. வேண்டுதல் அப்படியே நடக்கும்.! எப்படி மேற்கொள்வது.?!
9 வியாழங்கள் சாய் பாபா விரதம்.. வேண்டுதல் அப்படியே நடக்கும்.! எப்படி மேற்கொள்வது.?!
ஒவ்வொரு வியாழக்கிழமையும், சாய்பாபாவை நினைத்து தொடர்ந்து 9 வாரங்கள் விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் தங்கு தடை இன்றி நடக்கும். இந்த வியாழக்கிழமை விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் கடைபிடிக்க முடியும்.
எப்படி விரதம் இருப்பது?
வியாழக்கிழமை குளித்து முடித்து மனதை ஒரே நிலையில் வைத்து சாய்பாபாவுக்கு பூஜை செய்ய வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் சாய் பாபாவுக்கு பூஜை செய்யலாம். வெறும் வயிற்றுடன் சாய்பாபாவிற்கு பூஜை செய்யக்கூடாது. பழம், பால், அல்லது இனிப்பு ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விட்டு தான் பூஜை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: நாளை வியாழன்.. கொட்டிக்கொடுக்கும்.. குருவுக்கு விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம்.!
பட்டினி கூடாது
நாள் முழுதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு எடுத்துக் கொள்ளலாம். சாய்பாபாவின் அறிவுரைப்படி பட்டினியாக விரதம் இருக்கக் கூடாது. சாய்பாபா படத்தை கீழே வைத்து வழிபடக்கூடாது. ஒரு மஞ்சள் துணியை விரித்து அல்லது பலகை மீது வைத்து சாய்பாபாவை வழிபடலாம். ஈரத் துணியால் துடைத்துவிட்டு அதில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும்.
மஞ்சள் நிற மலர்கள்
சாய்பாபாவுக்கு மஞ்சள் நிற மலர்கள் பிடிக்கும். எனவே அதனை அணிவித்து தீபம், ஊதுபத்தி ஏற்ற வேண்டும். ஏதாவது ஒரு நெய்வேத்தியம் படையலாக வைக்கலாம். அதன் பின் அதை அண்டை, அயலார் வீட்டுடன் பகிர்ந்து சாப்பிட்டு சாய்பாபாவை வழிபடலாம்.
இயற்கை உணவு
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் விரதம் இருக்க முடியவில்லை என்றால் அடுத்த வியாழக்கிழமை வரும்போது அந்த விரதத்தை தொடரலாம். ஆனால், 9 வியாழக்கிழமைகள் விரதத்தை நிறைவு செய்து விட வேண்டும். தங்களால் முடிந்த இயற்கை உணவை நெய்வேத்தியமாக வைத்து படையல் போடலாம்.
மகிமையை எடுத்துரைக்க
சாய்பாபாவின் மகிமையை மற்றவர்களுக்கு தெரிவிக்கும் விதமாக அவரது புத்தகங்களை நம் வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகள், உறவினர்கள் அனைவருக்கும் கொடுக்கலாம். இவ்வாறு, விரதம் மேற்கொண்டால் நினைத்த காரியங்கள் அனைத்தையும் சாய்பாபா நிறைவேற்றுவார். மேலும், மகிழ்ச்சியுடன் உங்கள் குடும்பமும், நீங்களும் இருக்க சாய்பாபாவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிங்க: நாளை வியாழன்.. கொட்டிக்கொடுக்கும்.. குருவுக்கு விரதம் இருந்தால் நடக்கும் அதிசயம்.!