×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த ராசி பெண்களை மனைவியாக கொண்டிருக்கிறீர்களா.? நீங்கள்.?! உங்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்.!

இந்த ராசி பெண்களை மனைவியாக கொண்டிருக்கிறீர்களா.? நீங்கள்.?! உங்க வாழ்க்கை இப்படி தான் இருக்கும்.!

Advertisement

அதிர்ஷ்டகார மனைவி

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பழமொழியே இருக்கிறது. அப்படி வரமாக வரும் சில ராசிக்கார பெண்களால் கணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் உண்டாகும். அப்படி கணவனை பணக்காரர்களாக மாற்றக்கூடிய அதிர்ஷ்டத்தை கொண்ட ராசிக்கார பெண்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு அதிபதியாக இருப்பவர் சுக்கிரன், சுக்கிரன் என்றாலே செல்வ செழிப்பு, அழகு, ஈர்ப்பு, ஆடம்பரம் உள்ளிட்டவற்றின் காரணிகளாக திகழக்கூடியவர். ரிஷப ராசி பெண்கள் மிகவும் பொறுப்பாகவும், பாசமாகவும் இருக்கக்கூடியவர்கள். இவர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாள்வதில் மிகவும் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் வீட்டில் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். எனவே, ரிஷப ராசி பெண்களை மனைவியாக அடைந்தால் அந்த வீட்டில் செல்வம், அமைதி, மகிழ்ச்சி அனைத்தும் நிறைந்து காணப்படும்.

இதையும் படிங்க: மகரம் ராசிக்கு 2025 ஆண்டில் இது நடந்தே தீரும்..! 12 மாதத்திற்கும் விரிவான பலன்கள்.!

கடக ராசி

கடக ராசிக்கு சந்திரன் அதிபதியாக இருக்கிறார். கடக ராசி பெண்கள் அக்கறை அதிகம் கொண்டவர்கள். தங்கள் துணையின் ஆசயை நிறைவேற்றவும், அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை முனைந்து கொண்டு தீர்க்கவும் முயற்சிப்பார்கள். தங்களை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று கடக ராசி பெண்கள் நினைப்பார்கள். தங்கள் துணையை மட்டும் விட்டுக் கொடுத்து விடுவார்களா? இந்த ராசிக்கார பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மிக அதிர்ஷ்டசாலிகள்.

சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் சூரியன். இந்த சிம்ம ராசிக்கார பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை அதிகம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டிருப்பார்கள். எதையும் வெளிப்படையாக பேசுவதால் இவர்களது குணம் பலருக்கு பிடிப்பதில்லை. ஆனால், தலைமைத்துவ பண்புகளும் பண விஷயங்களை கையாள்வதில் திறமையும் கொண்டிருப்பார்கள். எனவே, இவர்கள் கணவரின் ஆசைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பதுடன் பண விஷயத்தில் பெரிய அளவில் துணைக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த ராசிக்கார பெண்களை மனைவியாக கொண்டவர்கள் விரைவிலேயே பணக்காரர்களாக மாறுவார்கள். 

கும்ப ராசி

கும்ப ராசிக்கு சனி பகவான் அதிபதியாக இருக்கிறார். கும்ப ராசி பெண்கள் மிக சுதந்திரமானவர்கள். நட்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்கக்கூடியவர்கள். தன்னம்பிக்கையுடன் இருக்கும் அவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பார்கள். இவ்வாறு நடந்து கொள்வதால் மற்றவர்களிடமிருந்து இவர்கள் தனியாக தெரிவார்கள். தங்கள் கணவரை அதிகம் நேசிக்க கூடியவராக இவர்கள் இருப்பார்கள். பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் சிறந்த முடிவுகளை எடுப்பதில் இவர் வல்லவர்.

மீன ராசி

மீன ராசிக்கு அதிபதியாக குருபகவான் இருக்கிறார். இந்த ராசிக்கார பெண்கள் தங்கள் துணையை அதிகம் காதலிப்பார்கள். இந்த பெண்கள் தங்கள் கனவை எப்படி நிறைவேற்றிக் கொள்வது என்பதில் தெளிவாக இருப்பார்கள். அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய நபர்களாக இருக்கும் இவர்கள், கணவருக்கு ஆதரவாக இருப்பார்கள். பண விஷயங்களில் தனித்துவமான யோசனைகளை கொண்டு அதை அபிவிருத்தி செய்வார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#5 zodiac women #Husband #Rasipalan #Luck
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story