மகரம் ராசிக்கு 2025 ஆண்டில் இது நடந்தே தீரும்..! 12 மாதத்திற்கும் விரிவான பலன்கள்.!
மகரம் ராசிக்கு 2025 ஆண்டில் இது நடந்தே தீரும்..! 12 மாதத்திற்கும் விரிவான பலன்கள்.!
காலசக்கரத்தில் பத்தாவது ராசியாக இருப்பது மகரம் ராசி. இந்த ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். மேலும், மகர ராசியில் உள்ள நட்சத்திரங்கள் திருவோணம் நட்சத்திரம், உத்திராடம் நட்சத்திரம் ( பாதம் 2,3,4 ), அவிட்டம் நட்சத்திரம் ( பாதம் 1,2 ) ஆகும். இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் லட்சியவாதியாக இருப்பார்கள். மேலும், இந்த ராசியினர் எதையும் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்கும் குணம் கொண்டவர்கள். இப்படிப்பட்ட குணங்கள் நிறைந்த மகர ராசியினருக்கு வரப்போகும் 2025 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
2025 ஆண்டு மகர ராசியினருக்கு எப்படி இருக்கும்?
மகர ராசியினருக்கு இந்த ஆண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உங்களின் சில உறவினர்களால் மன அழுத்தம் ஏற்படலாம். மேலும், பெண்கள் சில உடல்நலக் குறைபாடுகளை சந்திக்க நேரிடும். அதோடு, மருத்துவ செலவுகளை செலவிட வேண்டியிருக்கும். மேலும், நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நிதி நிலை அமையாது. அதுமட்டுமல்லாமல், நீதித்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாகும்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு பின், கொடி கட்டி பறக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.! உங்க ராசியும் இருக்கா.?!
2025 ஜனவரி மாதம் :
இந்த மாதத்தில் மகரம் ராசியினருக்கு தொழில் மேம்படும் மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும். மேலும், அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், விவசாயம் செய்பவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் அதன் பின்பு லாபம் கிடைக்கும். இந்த மாதத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒருவருக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
2025 பிப்ரவரி மாதம் :
இந்த மாதத்தில் குடும்பத்திலோ அல்லது வெளியிலோ யாருடனும் கோபம் மற்றும் சண்டையினால் ஆபத்து நேரிடலாம். ஆகையால் அதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும், சுப நிகழ்ச்சிகளால் பணம் அதிகம் செலவாகும். அதுமட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் காதலன் அல்லது காதலியின் இயல்பை ஏற்றுக்கொண்டு ஒரு சிறந்த உறவு பிணைப்பை உருவாக்கக்கூடிய நேரமாகும்.
2025 மார்ச் மாதம் :
இந்த மாதத்தில் நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் வாழ்க்கைத் துணை மற்றும் தாயின் உடல்நலத்தில் அதிக கவனம் வேண்டும். அதுமட்டுமல்லாமல், நீங்கள் விரும்பத்தகாத சூழலினால் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். ஆகையால், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
2025 ஏப்ரல் மாதம் :
இந்த மாதத்தில் மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்த மாதத்தில் உணவு பழக்கத்தில் அதிக கவனம் இருக்க வேண்டும். மேலும், இந்த மாதத்தில் சட்டம் சார்ந்த செலவுகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல், நிலுவையில் இருந்த பழைய தொகை கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு, இந்த மாதத்தில் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும். மேலும் காதல் வாழ்க்கை சுகமாக அமையும்.
2025 மே மாதம் :
இந்த மாதம் மகர ராசியினருக்கு ஒரு சிறந்த மாதமாக அமையும். மேலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேற்றத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதோடு, இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளினால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
2025 ஜூன் மாதம் :
இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். மேலும், போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருள்களை வாங்குவீர்கள். மேலும், புதிய நல்ல நட்பும் கிடைக்கும்.
2025 ஜூலை மாதம் :
இந்த மாதத்தில் மகர ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் யோகம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியும் நிலவும். அதுமட்டுமல்லாமல், வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், புதிதாக வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
2025 ஆகஸ்ட் மாதம் :
இந்த மாதம் மகர ராசியினருக்கு ஒரு சிறந்த மாதம் ஆகும். லாட்டரி மூலம் பணலாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். இருப்பினும், தாயின் உடல்நலக் குறைபாடுகள் காரணமாக மருத்துவ செலவுகள் ஏற்படும். மேலும், உங்கள் காதல் வாழ்க்கையில் சாதகமான நிலை ஏற்படும். உங்கள் காதலை நேர்மையான முறையில் வெளிப்படுத்தி உங்கள் காதலி அல்லது காதலனை மகிழ்வியுங்கள்.
2025 செப்டம்பர் மாதம் :
இந்த மாதம் மகர ராசியினருக்கு வேலை மற்றும் தொழில்களால் வெற்றி கிடைக்கும். மேலும் இந்த மாதத்தில் காதல் வாழ்க்கை நன்றாக அமையும். அதுமட்டுமல்லாமல், உறவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
2025 அக்டோபர் மாதம் :
இந்த மாதம் மகர ராசியினருக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மேலும், உங்கள் திறமைக்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் உணவு பழக்கத்தினால் செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2025 நவம்பர் மாதம் :
இந்த மாதத்தில் மகர ராசியினர்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கலாம். இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். மேலும், வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், தாய் வழி உறவுகளில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
2025 டிசம்பர் மாதம் :
இந்த மாதத்தில் மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைவீர்கள். மேலும், இந்த மாதத்தில் காதல் வாழ்க்கை நன்றாகவே அமையும். அதுமட்டுமல்லாமல், புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதம் மகர ராசியினருக்கு ஒரு சிறந்த மாதமாகும். நீங்கள் பல வெற்றியை அடைவீர்கள்.
இதையும் படிங்க: இதை செய்தால், நடுத்தெருவுக்கு வந்துடுவீங்க.! இந்த பழக்கத்தை உடனே மாத்துங்க.!