#Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!
#Big Breaking: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு?.. பொதுமக்கள் ஆவேசம்.. விழுப்புரத்தில் பரபரப்பு.!
காரில் இருந்தபடி வெள்ள சேதத்தை கவனிக்காமல் கடந்து செல்ல முற்பட்ட அமைச்சரின் மீது சேறு வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெஞ்சல் புயலின் காரணமாக கடுமையான சேதத்தை எதிர்கொண்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில், தற்போது வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது. வெள்ளத்தின் பிடியில் சிக்கிய மக்கள் உணவு, குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: சாத்தனூர் அணை திறப்பு விவகாரம்; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு.!
அரசூர் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து நடத்தப்பட்ட போராட்டம், பலமணிநேர போராட்டத்திற்கு பின் நிவாரணம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதன் பேரில் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 3 மணிநேரத்திற்குள் உணவு வரவில்லை என்றால், மீண்டும் போராட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேறு வீசப்பட்டதாக புகார்
இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் மீது மக்கள் சேற்றை வாரி இறைத்துள்ளனர். இருவேலம்பட்டு பகுதியில் இருக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடந்ச் சென்றபோது சேறு வீசப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி அரசூர் செல்லும் வழியில், இருவேலம்பட்டு கிராமத்தின் வழியே சென்றுள்ளார்.
அந்த கிராமத்திலும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அமைச்சர் காரில் இருந்து இறங்காமல் செல்ல முற்பட்டுள்ளார். இதனால் அவரின் மீது சிலர் சேற்றை வாரி இறைத்ததாக தெரியவருகிறது. உடனடியாக அமைச்சர் மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி பின் புறப்பட்டுச் சென்றனர்.
உரிய நிவாரணம் உடனடியாக கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: "உணவு, குடிநீர் வேண்டும்" போராட்டத்தில் குதித்த மக்கள்.. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து.!