பண்ரூட்டி: பணிக்கு புறப்படும்போது நேர்ந்த சோகம்; உதவி ஆய்வாளர் மாரடைப்பில் மரணம்.!
பண்ரூட்டி: பணிக்கு புறப்படும்போது நேர்ந்த சோகம்; உதவி ஆய்வாளர் மாரடைப்பில் மரணம்.!

இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறவிருந்த காவலர், மாரடைப்பில் மரணம் அடைந்த சோகம் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கேவி குப்பம், பசுமாத்தூர் பகுதியில் வசித்து வருபவர் காந்தி (வயது 59). இவர் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
காந்தியின் மனைவி இந்துமதி. தம்பதிகளுக்கு மகன், மகள் இருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வந்த காந்தி, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பண்ரூட்டி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். உதவி ஆய்வாளராக அவர் பணியாற்றுகிறார்.
இதையும் படிங்க: மகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் விதிமுடிந்த தந்தை; உயிரிழந்த அப்பா முன் திருமணம் நடத்திய உறவினர்கள்.! சோகத்திலும் நெகிழ்ச்சி சம்பவம்.!
மாரடைப்பால் நேர்ந்த சோகம்
கடந்த ஆறு மாதங்களாக பொறுப்பில் இருந்தவர், காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். இதனிடையே, நேற்று காலை சுமார் 08:30 மணியளவில், அவர் வழக்கம்போல பணிக்கு புறப்பட்டார்.
அப்போது, திடீரென நெஞ்சு வலிப்பது போல தோன்றி இருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறவே, அவர்கள் உடனடியாக பண்ரூட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், காவலரின் மரணத்தை உறுதி செய்தனர்.
இதையும் படிங்க: விவேக் எக்ஸ்பிரஸ் இரயில் எஞ்சின் பைலட் மாரடைப்பால் மரணம்; பணியின்போது நேர்ந்த சோகம்.!