சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை; மகள் இறந்த துக்கம் தாளாமல் சோகம்.!
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை; மகள் இறந்த துக்கம் தாளாமல் சோகம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல், இன்னும் பிற திரைப்படங்களில் நடித்திருந்த பிரபல முன்னணி நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நெடுந்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தார்.
நடிகை தற்கொலை
இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு, ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இருவரும் விடுதியில் தங்கியிருந்தபோது, சித்ரா மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: போலிசுக்கு போறியாடீ.? கர்ப்பினினு கூட பாக்காம, துள்ளத்துடிக்க நடந்த கொடூரம்.! கண்ணீரில் பெற்றோர்.!
ஹேம்நாத் விடுதலை
இந்த விவகாரத்தில் ஹேம்நாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து, தற்போது நீதிமன்றத்தால் விடுதலையும் செய்யப்பட்டார். நடிகை தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால், அவர் விடுதலை ஆனார்.
காமராஜ் தற்கொலை
இந்நிலையில், மகளின் மரணத்திற்கு பின்னர் சித்ராவின் தந்தை காமராஜ் மிகுந்த துயரத்தில் இருந்து வந்த நிலையில், அவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கணவரின் செயினுக்கு மாமியார்-மருமகள் சண்டை; 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!