போலிசுக்கு போறியாடீ.? கர்ப்பினினு கூட பாக்காம, துள்ளத்துடிக்க நடந்த கொடூரம்.! கண்ணீரில் பெற்றோர்.!
போலிசுக்கு போறியாடீ.? கர்ப்பினினு கூட பாக்காம, துள்ளத்துடிக்க நடந்த கொடூரம்.! கண்ணீரில் பெற்றோர்.!
என்னதான் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது, முன்பு போல் இல்லை என்று பலர் கூறினாலும் குடும்பம் என்ற பெயரில் அவர்களுக்கு நடக்கின்ற அக்கிரமங்கள் இன்னமும் குறைந்த பாடில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் கர்ப்பிணி என்றும் பாராமல் தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.
கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரம்
தூத்துக்குடி மாவட்டத்தின் கேவிகே நகரில் வசிக்கும் கிருஷ்ண பெருமாள் என்பவருக்கு கடந்த மார்ச் மாதம் முத்தாரம்மாள் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது, அந்த பெண் 4மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணிடம் கிருஷ்ண பெருமாளின் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். திருமணமான நாளில் இருந்து இந்த கொடுமைகளை அனுபவித்தாலும் அவர் தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வைத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: கணவரின் செயினுக்கு மாமியார்-மருமகள் சண்டை; 5 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.!
தந்தையிடம் கதறிய மகள்
ஒரு கட்டத்தில் இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்று நினைத்த முத்தாரம்மாள் தன் தந்தையிடம் இது பற்றி கூறி அழுதுள்ளார். அவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நேற்று மீண்டும் முத்தாரம்மாளிடம் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த கிருஷ்ண பெருமாளின் குடும்பத்தினர், "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், போலீசுக்கு போவாய்.?" என்று கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதில் முத்தாரம்மாள் மிகவும் மன உளைச்சலில் இருந்த நிலையில் தனது வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளிப்படையான டவுரி சிஸ்டம்
இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து சென்று அந்த கர்ப்பிணி பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது அந்த பெண்ணின் பெற்றோர் இடத்திலும் உறவினர்களிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெண்களுக்கான உரிமைகள் கிடைத்து விட்டதாக கொக்கரிக்கும் பலரும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரதட்சணை என்ற பெயரில் அரங்கேறி வரும் கொடுமைகள் பலவற்றையும் கவனிப்பதே இல்லை. இது அந்த பகுதி போலீசுக்கு வெளிப்படையாக தெரிந்தாலும், அவர்களும் தங்கள் வீட்டு பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்கின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதையும் படிங்க: தனிகுடித்தனத்திற்கு ஆசைப்பட்டு, புகுந்த வீட்டிற்கு எமனான மருமகள்.. பாச பந்தத்தால் பறிபோன 3 உயிர்கள்.!