போதை கொடுமை... உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி.!! போலீஸ் விசாரணை.!!
போதை கொடுமை... உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி.!! போலீஸ் விசாரணை.!!
திருச்சி அருகே உறையூரை சேர்ந்த தச்சு தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
மதுவிற்கு அடிமை
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்(56). இவரது மனைவி ராஜேஸ்வரி. தச்சு தொழிலாளியான அழகர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. மேலும் இவர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் பிரச்சனை செய்திருக்கிறார். தீராத குடிப் பழக்கத்தால் மன அழுத்தத்திலும் இருந்திருக்கிறார் அழகர்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டிற்கு வந்த அழகர் தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மறுநாள் காலையிலும் அவரது அறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழகர் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: அந்தோ.. பரிதாபம்... பிரசவத்தில் தாய், சேய் பலி.! அரசு மருத்துவமனை மீது புகார்.!
காவல்துறை விசாரணை
இது தொடர்பாக அழகரின் மனைவி கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அழகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!