தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: திமுகவினர் கொழுக்க சுரண்டப்படும் மாநிலத்தின் வளங்கள் - அண்ணாமலை கடும் தாக்கு.!

#Breaking: திமுகவினர் கொழுக்க சுரண்டப்படும் மாநிலத்தின் வளங்கள் - அண்ணாமலை கடும் தாக்கு.!

Annamalai On DMK Mine Stone Activity 16 March 2025  Advertisement

 

கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த திமுக நகராட்சி தலைவர் நூர்ஜகானின் மகன் ஷாருக்கான், டாரஸ் லாரி வைத்து கனிமவளத்தை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அவரின் லாரிகள் கனிமவல்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில், கனிமவளத்துக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக குற்றசாட்டை முன்வைத்துள்ள அண்ணாமலை, தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், "அனுமதியின்றி கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கடத்தியதாக, கோயம்புத்தூர் மதுக்கரை திமுக நகராட்சித் தலைவர் திருமதி. நூர்ஜகான் அவர்களது மகன் திரு. ஷாரூக்கான் என்பவருக்குச் சொந்தமான இரண்டு டாரஸ் லாரிகள், கோயம்புத்தூர் மாவட்ட கனிம வளத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: #Breaking: பொய்யும் புரட்டும் வேளாண் பட்ஜெட்.. அம்புலி மாமா கதை என்னாச்சி? - வேளாண் பட்ஜெட்டுக்கு அண்ணாமலை ஆவேசம்.!

வளங்கள் சுரண்டப்படுகிறது

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுவதுமே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க திமுகவினரால் நடத்தப்படும் இந்தக் கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோவதோடு, தமிழக மக்களுக்குத் தேவைப்படும் கட்டிடப் பொருள்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

திமுகவினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திமுக அரசு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கனிமவளக் கடத்தலில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #JustIN: தமிழ்நாடு பட்ஜெட் 2025 எப்படி? நான்கு வரிகளில் முடித்த அண்ணாமலை.! என்ன சொன்னார் தெரியுமா? 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#annamalai #tamilnadu #dmk #Coimbatore #அண்ணாமலை #திமுக #கோவை #கனிமவள
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story