#Breaking: பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? பயமே இல்லை - அண்ணாமலை கடும் கண்டனம்.!
#Breaking: பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? பயமே இல்லை - அண்ணாமலை கடும் கண்டனம்.!
சென்னையில் உள்ள பழவந்தாங்கல் இரயில் நிலையத்தில், பெண் காவலர் பாலியல் பலாத்கார முயற்சிக்கு உள்ளாகிய நிலையில், எதிரியை கடித்து தப்பினார். மேலும், போதையில் இருந்த சத்ய பாலு என்ற நபரை பொதுமக்கள் அடித்து நொறுக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த விஷயம் குறித்து மாம்பலம் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
ஏற்கனவே ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில், ஓடும் இரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்து தள்ளிவிட்ட சம்பவம் நடந்தது. கர்ப்பிணி பெண்ணின் கருவும் கலைநகத்து. இதனிடையே, பழவந்தாங்கல் இரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி அத்துமீற முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: விஜய்க்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? - அண்ணாமலை விளக்கம்.!
அரசு இயந்திரம் செயலிழந்தது
இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில், "சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் முக ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: ஆத்தூர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. திமுக பிரமுகர் தலையீடு? அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டு.!