#Breaking: அன்னபூரணி அரசு அம்மாவின் புது அவதாரம் எதற்காக? பரபரப்பு பேட்டி.. விபரம் உள்ளே.!
#Breaking: அன்னபூரணி அரசு அம்மாவின் புது அவதாரம் எதற்காக? பரபரப்பு பேட்டி.. விபரம் உள்ளே.!
எங்களின் திருமணத்தை பலரும் பாராட்டுகிறார்கள். பக்தர்களுக்கு தேவையானதை கொடுத்து கொண்டாட்ட வாழ்க்கையை ஏற்படுத்துவதே என மூன்றாவது திருமணம் முடிந்த அன்னபூரணி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்பவர், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விடுத்து, கள்ளகாதலருடன் ஓட்டம் பிடித்தார். இந்த விவகாரம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக அம்பலமாகி, அவர் நண்பருடன் கணவரை விடுத்தது சென்றார்.
கீழ்பென்னாத்தூரில் ஆலயம்
இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு அறுசுவை இழந்த அன்னபூரணி, தன்னை அன்னபூரணி அரசு அம்மாள் என அறிவித்து, ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்கி வந்தார். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் பகுதியில் கோவில் கட்டி, தன்னை அம்மனாக முன்னிறுத்தி ஆன்மீக சேவை செய்வதாக கூறுகிறார்.
இதையும் படிங்க: ரூ.16 கோடி பாலம் எங்கே? திறந்து 3 மாதங்களில் மூடுவிழா கண்ட ஆற்றுப்பாலம்.. திருவண்ணாமலையில் சம்பவம்.!
சமீபத்தில் அன்னபூரணி மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், மலேசியாவுக்கு சென்று அங்குள்ள பக்தர்களுக்கும் ஆலோசனை வழங்குவதாக சில புகைப்படங்கள் வெளியானது. இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில், தம்பதிகளின் பிரத்தியேக பேட்டி வெளியானது.
திருமணத்தை பாராட்டுகிறார்கள்
அந்த பேட்டியில் இவர்கள் பேசுகையில், "எங்களை பார்க்க வரும் பக்தர்கள் அம்மா அப்பாவை மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக பலரும் கூறுகிறார்கள். எங்களிடம் யாரும் விமர்சனம் முன்வைக்கவில்லை. திருமணத்திற்கு பின் பலரும் வருகிறார்கள். நான் எனது பாதுகாப்பாக திருமணம் செய்தேன். இன்று ஆன்மிகம் வியாபாரமாக உள்ளது.
மக்களிடம் நான் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் ஆசி வழங்குகிறேன். ஆன்மீகத்தை பணமாக மாற்றுபவர்கள் என்னை எதிர்க்கிறார்கள். அரசுவாக இருந்தால் மட்டுமே ஆசி வழங்க முடியும். அரசு இன்றி எதுவும் இல்லை. அருள்வாக்கு நான் சொல்லவில்லை. மங்களமாக இருப்பது சிலருக்கு ஜிகுஜிகு என தெரிகிறது. ஆன்மிகம் எதார்த்தமாக இருக்கிறது.
உணர்வு பரிமாற்றம்
ஆன்மீகத்தை கையாள உணவு, உடையை மாற்ற வேண்டும் என கூறுகிறார்கள். அதனை உடைக்கவே நாங்கள் வந்துள்ளோம். 3 ஆண்டுகளாக அருளாசி கொடுக்கிறேன். சத்தியத்தை போதித்து, ஒவ்வொருவருக்குள்ளும் அருளாசியை போதிக்கிறேன். நீங்கள் யார்? உங்களை எந்த சக்தி இயக்குகிறது? என்பதை உந்துகிறேன்.
இறைசக்தி முழுவதுமாக முதலில் ஆட்கொள்ளும் போது முதலில் ஆட்டம் இருந்தது. பின் அது முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அருளாசி மட்டுமே வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் உணர்வு பரிமாற்றம். நான் உங்களின் பிரச்சனை சரியாகிவிடும் என கூறவில்லை. அன்பு மட்டும் இருந்தால் போதும், அனைத்தும் சரியாகும்.
சேவை செய்ய வந்துள்ளேன்
உங்களைப்பற்றிய தகவலை பகிர்பவர்கள், எங்களின் தகவலை பகிர்கிறார்கள். அவர்கள் எந்த தகவலை வைத்து பகிர்ந்தாலும், எனக்கு பிரச்சனை இல்லை. எவ்வுளவு அவதூறுகளை தாண்டியும் நீங்கள் வந்து நிற்கிறீர்கள் என்பதை நேரில் கண்டு பலரும் பாராட்டுகிறார்கள். நான் டொனேஷன் எதுவும் வாங்கவில்லை, சேவை செய்ய வந்துள்ளேன், சேவை செய்கிறேன்.
எனது பீடத்தை நிர்வகிப்பது தீட்ஸை வாங்கும் நபர்கள் மெயின்டெயின் செய்கிறார்கள். என்னிடம் அருளாசி வாங்கி செல்பவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உதவி செய்கிறார்கள். குடும்பத்தோடு வர வேண்டும், குடும்பத்தோடு அருளாசி வாங்கி செல்லலாம், அவர்கள் அவர்களின் வாழ்க்கையை பார்க்கலாம்.
பிரம்மசரியம் அவசியம் இல்லை
உங்களின் குடும்பத்துடன் வாழ்ந்து நீங்கள் அருளாசி பணிகளை மேற்கொள்ளலாம். கடவுள் சக்தியை வெளிக்கொணர பிரம்மசரியம் அவசியம் இல்லை. எனது கணவரின் இறை சக்தியை உணர்ந்து அவருக்கு சிலை வைத்தேன். எனது சிலையை பக்தர்கள் வைத்தார்கள். அவர்கள் அம்மாவின் சக்தியை உணர்ந்தவர்கள்.
சாதாரண மனிதர்கள் இறந்தால், அவர்கள் ஆவியாக இருப்பார்கள். விண்ணுலகம், கீழுலகம் சென்று இருப்பார்கள். அரசு அப்பாற்பட்ட சக்தி. அவரே மீண்டும் இன்று மூன்றாவது கணவராக இருக்கிறார். என்னுடைய இயல்பு, மக்களுக்கு அருள்புரிந்து, பாதுகாத்து, வழிநடத்த வந்துள்ளேன்.
வாரிசு எப்போது?
அன்னப்பூரணிக்கு அன்பு மட்டும் தான் தெரியும். என்னை எதிர்ப்பவர்களுக்கு எனது சிரிப்பே பரிசு. நாங்கள் குழந்தை தொடர்பாக இன்னும் திட்டமிடவில்லை. நான் அன்னபூரணிக்கு கணவராக இருப்பேன் என நினைக்கவில்லை. சக்தியால் செயல்படும் நகர்வு இது. நானும் - அரசும் இணைந்துபோதுகூடாது நிகழ்வாக நடந்தது. எங்களுக்கு பயம் இல்லை. பயம் என்றால் என்ன என கேட்போம். எப்போதும் நாங்கள் தைரியத்துடன் இருப்போம். எங்களை இயக்கும் சக்திக்கு மட்டுமே பயம் கொள்வோம்.
எங்களை தேடி வரும் மக்களுக்கு நோயை சரி செய்து, பிரச்சனைகளை சரி செய்து, தேவைகளை கொடுத்து, நோய் இன்றி ஆரோக்கியமாக வாழ வைப்பது மட்டும்தான்" என கூறினர்.
நன்றிசன் தொலைக்காட்சி
இதையும் படிங்க: கட்டை விரலில் பாம்பு கடித்து பெண் உயிர் ஊசல்; மழை நேரத்தில் கவனம்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!