மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை வேண்டாம் என எழுதிக்கொடுத்த தமிழ்நாடு அரசு; மத்திய அமைச்சர் பதில்.!
மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை வேண்டாம் என எழுதிக்கொடுத்த தமிழ்நாடு அரசு; மத்திய அமைச்சர் பதில்.!
அரசுமுறை பயணமாக சென்னை வந்துள்ள மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை ஐசிஎப் கோச்சில் கட்டமைக்கப்பட்டு வரும் வந்தே பாரத் இரயில் பெட்டிகளை நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மதுரை - தூத்துக்குடி வழித்தடம்
அப்போது, செய்தியாளர்கள் தரப்பில் இருந்து மதுரை - தூத்துக்குடி புதிய இரயில் பாதை திட்டத்தை, மத்திய இரயில்வே அமைச்சகம் ரத்து செய்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, மதுரை - தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக நேரடியாக இரயில் பாதை அமைக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்தது.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நடனமாடும் திமுக? - அண்ணாமலை அதிர்ச்சி தகவல்.!
மாநில அரசு வேண்டாம் என்றது
இதற்காக நில எடுப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு, அதன் சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன. இதனிடையே, திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வழித்தடத்தை மாநில அரசு எழுத்துபூர்வமாக வேண்டாம் என பதில் அளித்ததால், அத்திட்டம் ரத்து செய்யப்பட்டது என அமைச்சர் அஸ்வினி தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: மதுரை: என் வண்டிக்கு ப்ரீ சர்வீஸ் கிடையாதா? - மெக்கானிக் கடையில் பளார் விட்ட காவலர்.. வீடியோவுடன் புகார்.!