காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!
காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல்; சென்னையில் பயங்கரம்.!
தன்னை காதலிக்க சொல்லி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர், பெட்ரோல் ஊற்றி பதறவைத்த சம்பவம் தலைநகரில் நடந்துள்ளது .
சென்னையில் உள்ள யானைக்கவுனி பகுதியில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசித்து வருபவர் அர்ஜுன் (வயது 20). அர்ஜுன் 19 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரியவருகிறது. இந்த விசயத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தாலும், அர்ஜுன் தனது முயற்சியை கைவிடவில்லை.
இந்நிலையில், சம்பவத்தன்று இளம்பெண் நடந்து வந்தபோது, அவரின் மீது பெட்ரோல் ஊற்றி, தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்திடுவேன் என அர்ஜுன் மிரட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: கிண்டி மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம்; இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின்.!
இருவர் கைது
இதனால் பதறிப்போன இளம்பெண் யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் அர்ஜுன், சம்பவத்தின்போது அவருடன் இருந்த ஜேம்ஸ் (வயது 20) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. மேலும், இருவரின் மீதும் பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: புத்தாண்டு கோலம் மீது வண்டி ஓட்டியவருக்கு அரிவாள் வெட்டு.. சென்னையில் பகீர்.!