தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சென்னை: கலிகாலம்.. தனிமை பெண்கள் டார்கெட்.. 3 பேர் கும்பலால் 34 வயது பெண்ணுக்கு விடுதி அறையில் நடந்த பயங்கரம்..!

சென்னை: கலிகாலம்.. தனிமை பெண்கள் டார்கெட்.. 3 பேர் கும்பலால் 34 வயது பெண்ணுக்கு விடுதி அறையில் நடந்த பயங்கரம்..!

Chennai Parry's corner Woman Abused by Gang instagram Love  Advertisement

வீடுகளில் தனியே இருக்கும் பெண்களை குறிவைத்து, நேரில் வரவழைத்து சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது. 

சென்னையில் உள்ள பாரிமுனை பகுதியில் செயல்பட்டு வரும் விடுதியில் பெண்ணை அடைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்ததன்பேரில், அதிகாரிகள் நேரில் சென்று 34 வயது பெண்ணை மீட்டு விசாரணை செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், பெண்மணி கொடுங்கையூரை சேர்ந்தவர் ஆவார். கணவரை பிறந்து வாழ்ந்து வந்தவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து வந்துள்ளார். 

அதில் ஐயப்பன் என்பவருடன் அறிமுகம் ஏற்படவே, அவர் தன்னை பெண்ணிடம் மருத்துவர் என அறிமுகம் செய்துள்ளார். உண்மையில் மருத்துவரான? என்பதை கூட விசாரிக்காத பெண்மணி, தான் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் கதையெல்லாம் சில நாட்களிலேயே உளறி இருக்கிறார். இதனை தனக்கு சாதகமாக்கிய ஐயப்பன், தானும் மனைவியை பிரிந்து தனியே வசிப்பதாக கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சென்னை: ஓசி சோறு கொடுக்காத ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு; மூவர் கை எழும்பு முறிவு.!

நம்பிக்கையில் நடந்த மோசடி

ஆலோசனை வழங்குவதாக ஐயப்பன் நடித்து பெண்ணை கவர, அவரை நேரில் சந்திக்க வேண்டும் என பெண்ணுக்கு ஆவல் ஏற்பட்டுள்ளது. மேலும், குறைத்த வட்டிக்கு தான் பணம் கொடுப்பதாகவும், நீங்கள் பணம் வாங்கி பொருளாதார ரீதியாக முன்னேறுங்கள் என கூறி இருக்கிறார். இந்த தகவலை நம்பி பெண்ணும் பாரிமுனைக்கு சென்றுள்ளார். 

chennai

ஆசையை தூண்டி அதிர்ச்சி செயல்

ஐயப்பனை நம்பி பாரிமுனைக்கு சென்ற பெண்ணை, அவர் தான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பெண் தனது நகையை கைப்பையில் வைக்க, ஒருகட்டத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர். அப்போது, இரண்டு பேர் திடீரென அறையில் ஒழிந்திருந்து வெளியே வந்தனர். இதனைக்கண்டு பெண்மணி பதறிப்போன நிலையில், ஐயப்பன் பயம் வேண்டாம், இவர்களே பணம் கொடுப்பவர்கள் என கூறி இருக்கிறார். 

3 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்

இவர்களுடனும் அட்ஜெட்ஸ்ட் செய்யுங்கள் என கூறி கும்பல் சமாதானம் பேச, பின் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கிய கும்பல், பெண்ணை அறைக்குள் சிறை வைத்து தப்பிச் சென்றது. கதறியபடி பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை விவரிக்க, அதிகாரிகள் விசாரணை நடத்தி மீன் வியாபாரி ஐயப்பனை கைது செய்தனர். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆவார். அவருடன் இருந்தவர்கள் துரைப்பாக்கத்தை சேர்ந்த பெயிண்டர் வீரமுத்து, சாமு என்பது அம்பலமானது. மூவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. 

பெண்களுக்கு டார்கெட்

இவர்களின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பெண்கள், கணவரை பிரிந்த பெண்கள், தனியாக வாழும் பெண்கள், பணத்துடன் ஊர் சுற்ற நினைக்கும் பெண்கள், தனது சொந்த சம்பாத்தியத்தில் வாழும் பெண்களை குறிவைத்து ஐயப்பன் மோசடி வலையை வீசியுள்ளார். தனது வலையில் விழும் பெண்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக பல கதைகளை கூறியுள்ளார். 

10 க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிப்பு

பெண்கள் பேசத் தொடங்கியதும், அவர்களின் உணர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பேசி, பெண்களை நேரில் அழைத்து பணம், நகை பறித்தது தெரியவந்தது. சிலரை பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாக சென்னை, கோவை, மதுரை என 10 க்கும் மேற்பட்ட பெண்களை இவர்கள் சீரழித்து இருக்கின்றனர். இவர்களிடம் சிக்கும் பெண்களும் எதோ ஒரு காரணத்திற்காக எதிர்காலம், குடும்ப நிலை போன்ற காரணங்களில் சிக்கி புகார் அளிக்க இயலாமல் அவதிப்பட்டுள்ளனர். 

கணவரை பிரிந்து, துணை இல்லாமல் தனியாக வாழ்ந்து வரும் பெண்களிடம் 10 நாட்களில் வாழ்க்கையே அவர்கள் தான் என நம்பவைத்து, மோசடி செயலுடன் பாலியல் குற்றத்தையும் அரங்கேற்றி கும்பல் தப்பிச் சென்று தற்போது சிக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை; கயவனை தூக்கிய சென்னை காவல்துறை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #instagram love #tamilnadu #இன்ஸ்டாகிராம் #தமிழ்நாடு #சென்னை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story