பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை; கயவனை தூக்கிய சென்னை காவல்துறை.!
பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் தொல்லை; கயவனை தூக்கிய சென்னை காவல்துறை.!
சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் இளம்பெண், வீட்டுக்கு சென்று வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவர் தினம் வேலைக்கு செல்லும்போது, அவரை பின்தொடர்ந்து வரும் நபர் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
மேலும், பெண்ணை தனது பாலியல் இச்சைக்கு இணங்க வேண்டும் என தினமும் தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் கயவன் பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாலியல் தொல்லை
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்.. நிலைதடுமாறி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.!
விசாரணையில், அவர் ராஜேஷ் (வயது 35) என்பதும், அதே பகுதியில் வசித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் ராஜேஷை பெண் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமி இப்படியா மரணிக்கும்? கேட் சரிந்து விழுந்து சோகம்.. தந்தை கண்முன் மகள் பலி.!