சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்துவரும் 1 வாரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்.
கனமழையை பொறுத்தவரையில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி உட்பட வடஉள் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். நாளை மேற்குத்தொடர்ச்சி மலை, அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
இதையும் படிங்க: இரவு 7 மணிவரை வெளுத்துக்கட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை
13 ம் தேதி டெல்டா மாவட்டங்களில், 14 ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். தற்போதைய நிலவரப்படி அரபிக்கடலில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, வரும் 3 கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
சென்னையை பொறுத்தவரையில் ஒருவாரம் மழை இருக்கும். 14 ம் தேதி கனமழைய எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை விலகிக்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: துயர சம்பவம்... வீடியோ கேம் விளையாட்டால் விபரீதம்.!! உயிரை மாய்த்துக் கொண்ட 15 வயது சிறுவன்.!!