டேட்டிங் செயலியால் விபரீதம்.. கோவை சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பகீர் பின்னணி.!
டேட்டிங் செயலியால் விபரீதம்.. கோவை சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பகீர் பின்னணி.!

7 பேர் கும்பலால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், பதறவைக்கும் தகவல் அம்பலமாகி இருக்கிறது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்த நிலையில், தாத்தா-பாட்டி பராமரிப்பில் இருந்த சிறுமியின் தாத்தா உயிரிழந்ததால், பேத்திக்கு துணையாக பாட்டி இருந்துள்ளார்.
இதையும் படிங்க: நெஞ்சமெல்லாம் பதறுதே.. 17 வயது சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; கோவையில் பதறவைக்கும் கொடுமை..!
இந்நிலையில், வீட்டில் இருந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டேட்டிங் செயலி உபயோகம் செய்யும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் வாயிலாக கல்லூரி மாணவர்களின் அறிமுகம் சிறுமிக்கு ஏற்பட்டு, இரண்டு கல்லூரி மாணவர்களுடன் பேசி வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை சிறுமியின் பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
செல்போன் சுவிட்ச் ஆப்
அப்போது, சிறுமியை பார்க்க அவரின் தந்தையும் வந்திருந்துள்ளார். சிறுமி இல்லாதது குறித்து பாட்டியிடம் கேட்க, அவர் மாலை நேரத்தில் வெளியே சென்றவர் வரவில்லை என கூறியுள்ளார். இதனால் சிறுமியின் செல்போனை அழைத்து பார்த்தபோது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.
சிறுமியின் தோழிகளிடம் விசாரித்து முன்னேற்றம் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்த, அதிகாலை 3 மணியளவில் சிறுமியை இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, சிறுமி டேட்டிங் செயலி மூலமாக ஆண் நண்பர்களுடன் பழக, நட்பாக பழகிய மாணவர்கள் 2 பேர், தனது நண்பர்கள் என கூடுதலாக 5 பேர் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று, மொத்தமாக 7 பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
செல்போனை ஆன் செய்தபோது பல நம்பர்களில் இருந்து மிஸ்ட்டு கால் வந்ததால், இளைஞர்களிடம் தன்னை பாட்டியின் வீட்டுக்கு கொண்டு சென்று விடுமாறு கூறியதும் அம்பலமானது. இதனையடுத்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஜெபின் (20), ரக்சித் (19), அபினேஷ் (20), தீபக் (20), யாதவராஜ் (19), முத்து நாகராஜ் (வயது 19), நிதிஷ் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: உடற்பருமனால் சோகம்; தங்கை தற்கொலை., அண்ணன் உயிர் ஊசல்.! கோவையில் சோகம்.!