உடற்பருமனால் சோகம்; தங்கை தற்கொலை., அண்ணன் உயிர் ஊசல்.! கோவையில் சோகம்.!
உடற்பருமனால் சோகம்; தங்கை தற்கொலை., அண்ணன் உயிர் ஊசல்.! கோவையில் சோகம்.!
சென்னையில் வசித்து வரும் நபர் இப்ராஹிம் பாஷா (வயது 54). இவரின் தங்கை சம்சத் பேகம் (வயது 50). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கோவைக்குச் சென்றனர்.
அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கியவர்கள், தூக்க மாத்திரையை அதிகளவு சாப்பிட்டு மயங்கியுள்ளனர். இருவரின் அறையில் இருந்து நடமாட்டம் இல்லாததால், ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தற்கொலை
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கதவை உடைத்து உள்ளே சென்று, மயக்க நிலையில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: கோவை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் பார்த்து 4 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!
இவர்களில் சம்சத் பேகம் மட்டும் உயிரிழந்தக நிலையில், இப்ராஹிம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், உடற்பருமன் காரணமாக வாழ பிடிக்காமல் இவ்வாறான விபரீத செயலை எடுத்ததாக தெரியவந்துள்ளது.
மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கோவை: நள்ளிரவில் பெண்களை துரத்திய போதை இளைஞர்; பணி முடித்து வந்தபோது பகீர்..!