குளம் நிரம்பி வெளியேறிய நீர்; சாலையில் ஓடிய மீன்கள்.. அள்ளிச்சென்ற கோவையன்ஸ்.!
குளம் நிரம்பி வெளியேறிய நீர்; சாலையில் ஓடிய மீன்கள்.. அள்ளிச்சென்ற கோவையன்ஸ்.!
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் அக்.17 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பரவலாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, ஒருசில இடங்களில், நகர வீதிகளில் மழைநீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதையும் படிங்க: பிரியாணி இலைக்கும் பீடி இலைக்கும் வித்தியாசம் தெரியாமல் போதையில் ரகளை; உண்மை தெரிந்ததும் மன்னிச்சு மொமண்ட்..!
இந்நிலையில், கோயம்புத்தூரில் உள்ள வாலாங்குளம் நிரம்பி நீர் அதிகம் வெளியேறி இருந்தது. இதனால் குளத்தில் இருந்து உபரி நீர் வெளியியேறிய நிலையில், மீன்களும் சாலைகளில் ஓடியது.
மழை குறைந்தபோது நீர் சிறிதளவு குறையத்தொடங்கவே, பொதுமக்கள் பலரும் சாலைகளில் நீந்திச் சென்ற மீன்களை கைகளில் பிடித்து தங்களுடன் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி விடுதியில் திடீர் தற்கொலை; கோவையில் சோகம்.!