"கலெக்டர், எஸ்.பி எல்லாம் நான் சொல்றதைத்தான் கேட்கணும்" - திமுக மா.பொ ஆடியோ லீக்.!
கலெக்டர், எஸ்.பி எல்லாம் நான் சொல்றதைத்தான் கேட்கணும் - திமுக மா.பொ ஆடியோ லீக்.!

தர்மபுரி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக சமீபத்தில் தர்மச்செல்வன் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, தர்மசெல்வன் அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ள சர்ச்சை ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆடியோவில் தர்மசெல்வன் பேசியதாக கூறப்படும் தகவலில், "மாவட்டத்தில் எந்த அதிகரிக்கும் என்னை மீறி செயல்பட கூடாது. நீங்கள் நினைக்கும் ஆட்களை சொல்லி மாற்ற முடியாது. நான் லெட்டர் வைத்தால் தான் மாற்ற முடியும்.
இதையும் படிங்க: போதையில் வம்பு வழக்கு வந்ததும் பம்மு.. போலீசிடம் வம்பிழுத்த 2 பெண்கள் கைது.!
மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., அரசு அதிகாரிகள் என அனைவரும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். எந்த அதிகரிக்கும் நான் சொல்வதை மீறி குசு கூட விட முடியாது. கேம் விளையாட இங்கு இடம் இல்லை. கேம் விளையாடினால் கதை முடிந்துவிடும்.
நான் சொல்வதை கேட்கும் நபர்களுக்கு மட்டுமே இங்கு இடம். கேட்காத பட்சத்தில் அவர்கள் உடனடியாக இங்கிருந்து தூக்கியடிக்கப்படுவார்கள். எந்த அலுவலகத்தில் எந்த விஷயம் நடந்தாலும் எனக்கும், ஒன்றிய செயலாளருக்கும் தெரிய வேண்டும். ஒரு அதிகாரி கூட நான் சொல்வதை கேட்காத பட்சத்தில் இங்கு இருக்கமாட்டார்கள்" என பேசப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
வீடியோ நன்றிநியூஸ் தமிழ் 24 X 7
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக பாலியல் தொல்லை; பூசாரி போக்ஸோயில் கைது.!